Tuesday, October 20, 2009

ஆதவன்

கே.எஸ்.ரவிகுமாரிடம் எந்த கதையை கொடுத்தாலும், அவருக்கே உரிய பாணியில் எல்லாத்தரப்பையும் கவரும் வண்ணம் திரைக்கதை அமைத்து வெளியிட்டு விடுவார். இப்ப, தசாவதாரத்திற்கு பிறகு ஒரு சின்ன மாற்றம் தெரிகிறது. திரைக்கதையில் இல்லை, மேக்கிங்கில், பண்ணுகிற செலவில். சரி, விடுங்க... அவரும் பிரமாண்ட இயக்குனர் ஆகிவிட்டார். வழக்கம் போல், கியாரண்டி இருந்தால் சரி.

ஆதவனும் வழக்கமான கதை. வழக்கமான திரைக்கதை. இருந்தும், போரடிக்காமல் காமெடிக்கு வடிவேலு துணையிலும், பாடலுக்கு ஹாரிஸ் துணையிலும் செல்கிறது. அதனால், வழக்கம் போல் கே.எஸ்.ரவிக்குமாருக்கு வெற்றி படமாகி விடும். வடிவேலு, சரோஜா தேவி மேக்கப் பற்றி அடிக்கும் நக்கலுக்கு தியேட்டரில் சிரிப்போ சிரிப்பு.



இதுவரை எந்த படத்திலும் சூர்யாவிற்கு என்று ஒரு தனி டைட்டில் போடுவதில்லை. இதில் அவருக்கும் தொடங்கி வைத்துள்ளார்கள். அவரது பர்சனல் புகைபடங்களை வைத்து... சிறுவயதிலிருந்து இப்போது உள்ளது வரை... நல்லாத்தான் இருக்குது...

இயக்குனருக்கு என்றும் ஸ்பெஷல்'ஆக போடுகிறார்கள், மலையில் இயக்குனர் முகம் தெரியும் வண்ணம்.

பத்து வயது சூர்யாவை கிராபிக்ஸ் உபயத்தால் கொண்டு வந்துள்ளார்கள். இதற்கு முன், எந்த நடிகரையாவது இப்படி காட்டி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழின் முதல் முயற்சி ஓரளவிற்கு நன்றாகவே வந்துள்ளது. வாழ்த்துக்கள். ட்ரெண்ட் தொடருமா? வெற்றிகரமாக தொடர்ந்தால், சுலபமாகும் பட்சத்தில் குழந்தை நட்சத்திரங்கள் நிலை!

பாடல்கள் கன்னாபின்னாவென்று படத்தில் வருகிறது, எதற்கு என்று தெரியாமலே. ஏற்கனவே ஹிட் ஆனதால், சரி.

கிளைமாக்ஸ் ஹெலிகாப்டர்-கிரேன்-வெடிகுண்டு சண்டைக்காட்சி நல்ல விறுவிறுப்பு. வெளிநாடு போல் இருந்தது. ஆனால், காட்சிப்படி இந்தியாவில் நடப்பது தான். எப்படி இருந்த ரவிக்குமார், இப்படி ஆகிட்டாரே? ஒரு வேளை, இது தான் குறைந்த செலவோ?

நான் பத்து வயது பொடிசுகள் இருவரை அழைத்து சென்றிருந்தேன். அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. படம் முடிந்து வெளிய வந்த பிறகு, அவர்களிடம் கேட்டேன், எப்படியென்று. சூப்பர் என்றார்கள். அது போதும் எனக்கு.

.

19 comments:

வினோத் கெளதம் said...

//நான் பத்து வயது பொடிசுகள் இருவரை அழைத்து சென்றிருந்தேன். அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. படம் முடிந்து வெளிய வந்த பிறகு, அவர்களிடம் கேட்டேன், எப்படியென்று. சூப்பர் என்றார்கள். அது போதும் எனக்கு//

ஒரு வேளை சிறுவறுகளுக்கான படமோ..:))

SShathiesh-சதீஷ். said...

இதைத்தானே விஜய் குருவியில் செய்தார். அப்போ தப்பானது இப்போ சரியோ.....ஆதவன் ஏகன் வில்லு வரிசையில் சேரும் இந்த படம் நல்லாய் இருக்கேன்ற ஒரே மனிதர் நீங்கள். ஆனால் உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். துணிந்து சொன்னதுக்கு.

சரவணகுமரன் said...

வினோத் கௌதம்,

பொதுவா, சிறுவர்களுக்கு சண்டையும், காமெடியும் பிடிக்கும். இதில் முதல் சண்டைக்காட்சியில், (அயன் போல்) சூர்யா தாவி தாவி போனார். கடைசி சண்டைக்காட்சியிலும் கொஞ்சம் வித்தை காட்டினார். தவிர, வடிவேலு அவர் பங்குக்கு அடி வாங்கினார். அதனால் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சரவணகுமரன் said...

சதீஷ்,

படத்தை பார்த்து தோன்றியதை எழுதியிருக்கிறேன். நானும் என் நண்பர்களிடம் கேட்ட போது, நல்லா இல்லை என்றுதான் சொன்னார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிலீங். நான் நெகட்டிவ் ரிவ்யூஸ் கேட்டு போனாதால, அப்படி இருக்கலாம்.

எல்லாம் எதிர்பார்ப்பை பொறுத்தது தானே?

புலவன் புலிகேசி said...

வடிவேல் ஹீரோவா 3 வது படம்???

Sarav said...

Surya na எதிர்பார்ப்பு irukum...Vijay na எதிர்ப்பு Irukumnu Solringa Appadi thana!!!

Vijay panatha Surya Panina எதிர்பார்ப்பா?!

சரவணகுமரன் said...

புலிகேசி, நல்லா பண்ணுறீங்க நக்கல்...

சரவணகுமரன் said...

பொல்லாதவன்,

நெகடிவ் ரிவ்யூஸ்'னாலே எதிர்பார்ப்பு கம்மின்னு சொல்ல வந்தேங்க...

அப்புறம், வில்லு'லயும் முதல் பாதில வடிவேலு காமெடி நல்லாத்தான் இருக்கும்...

Sarav said...

//'வில்லு'லயும் முதல் பாதில வடிவேலு காமெடி நல்லாத்தான் இருக்கும்//

Ipo Solringa but வில்லு vanthapo??
Mmm...

SShathiesh said...

இப்போது உங்கள் பார்வையில் விஜயும் விஜய் ரசிகர்களும் இழிச்சவாயர்களே

சரவணகுமரன் said...

// Pollathavan said...
//'வில்லு'லயும் முதல் பாதில வடிவேலு காமெடி நல்லாத்தான் இருக்கும்//

Ipo Solringa but வில்லு vanthapo??
Mmm...
//

வில்லு வந்தப்ப என்ன சொன்னேன்’ன்னு நீங்களே பாருங்க...

http://www.saravanakumaran.com/2009/01/blog-post_19.html

அப்பாடி தப்பிச்சேன்! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்க அண்ணன் ரவிக்குமார் படம் ஆடவன் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப நன்றி சரவணன்.

ISR Selvakumar said...

படம் (நான் உட்பட) பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் உங்களுக்குப்பிடித்திருக்கின்றது. அதுதான் சினிமா. அனைவருக்கும் பிடித்ததுபோலவோ, பிடிக்காததுபோலவோ படமெடுக்க முடியாது.

Sarav said...

// அப்பாடி தப்பிச்சேன்! :-) //

ha ha ha...

நான் இப்போ போறேன் விஜய் வேட்டைக்காரன்ல "மீண்டு" வரும் போது நான் "மீண்டும்" வருவேன்...

நரேஷ் said...

//எல்லாம் எதிர்பார்ப்பை பொறுத்தது தானே?///

தத்துவம் சூப்பரு!!!

எல்லாருக்கும் புடிச்ச மாதிரி படம் என்ன, பதிவு கூட போட முடியாதே!!!

சரவணகுமரன் said...

வாங்க ரமேஷ்...

சரவணகுமரன் said...

//பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் உங்களுக்குப்பிடித்திருக்கின்றது. அதுதான் சினிமா. அனைவருக்கும் பிடித்ததுபோலவோ, பிடிக்காததுபோலவோ படமெடுக்க முடியாது.//

கரெக்ட் செல்வக்குமார்...

சரவணகுமரன் said...

//நான் இப்போ போறேன் விஜய் வேட்டைக்காரன்ல "மீண்டு" வரும் போது நான் "மீண்டும்" வருவேன்...
//

வாங்க... வாங்க...

விஜய் மீண்டு வருகிறாரா...இல்ல, மீண்டும் துவண்டு போறாரா’ன்னு பார்ப்போம்...

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்.

//எல்லாருக்கும் புடிச்ச மாதிரி படம் என்ன, பதிவு கூட போட முடியாதே!!!//

அதானே!

சரவணகுமரன் said...

படத்தையே கலைஞர் டிவில வடிவேலுவை வச்சு தான் மார்க்கெட்டிங் பண்றாங்க.

நேற்று ஆதவன் படத்திற்காக வடிவேலுவுடன் நேரடியாக பேச ஏற்பாடு செய்திருந்தார்கள். இரு வாரம் முன்பு, உன்னைப்போல ஒருவனுக்காக கமல்!.

போன் பண்ணியவர்களும், நீங்கத்தான் கலக்கிட்டீங்க, சூர்யாவை விட சூப்பர், அப்படின்னு ஒரே புகழாரம்.

சூர்யா, ரவிக்குமார், ஹாரிஸ் - இவுங்களெல்லாம் எங்க?