Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

'தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என்று சொல்வதையே யோசித்து சொல்ல வேண்டிய நிலை தமிழனுக்கு. :-)

தை’யா, சித்திரை’யா? எதில் தமிழ் புத்தாண்டு துவங்குகிறது என்ற குழப்பம் பலருக்கு. என்னை பொறுத்தவரை சித்திரையில் தான் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான அறிவுபூர்வமான விளக்கம் இறுதியில்.

---

கலாநிதி மாறனுக்கோ, கலைஞருக்கோ குழப்பமே இருக்காது. தொலைக்காட்சி வியாபாரத்தில் சொன்னேன். ஒன்றிற்கு 18வது ஆண்டு துவக்க விழா. அதனால் சிறப்பு நிகழ்ச்சிகள். மற்றொன்றில், சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாம். இப்படி மாத மாதம் போடுவார்களோ?



அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கூட சிறப்பு நிகழ்ச்சிகள் போடலாம்.

---

உண்மையில் எது தமிழ் புத்தாண்டு என்பதில் எனக்கு அக்கறையில்லை. இந்த ஆராய்ச்சியை நானே எடுத்து நடத்தினாலும், கடைசியில் ஒரு ‘குத்து மதிப்பு’ இருக்கும்.

நண்பனிடம் கேட்டேன். அவன் “அடுத்தது, அம்மா ஆட்சியில், இது தான் தமிழ் புத்தாண்டு. இப்ப இல்லை’ன்னு சொல்லிட்டு, அப்புறம் ஆமாம்’ன்னு சொல்லி, ஏன் நாமலே நம்மள முட்டாளாக்கிக்கணும்?”.

---

வருங்காலத்தில், சித்திரை மாத புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியாக இருப்போமோ இல்லையோ, சுள்ளென்று அடிக்கும் வெயிலுக்கு பயந்து வெலவெலத்து இருக்க போகிறோம். அலுவலகத்தில் ஜில்லென்ற காற்றில் பெரும்பாலும் பதுங்கி இருந்தாலும், அது எங்கிருந்து வருகிறது, அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகளை யோசித்தால் கலக்கமாகத்தான் இருக்கிறது.

அலுவலகத்தை சுற்றி மஞ்சள் மஞ்சளாக துளிகள். ரசாயன வாடை. காரணம் கேட்டால், குளிர் சாதனப்பெட்டியை கைக்காட்டுகிறார்கள்.

---

இதுவரை பங்குனி மாத வெயில் பல்லைக் காட்டிக்கொண்டு அடித்திருந்தாலும், சென்னை அணியினர் அதற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அது தான் இம்முறை அணியின் ரகசிய ஆயுதம்.

---

சித்திரையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடினால் தான் நல்லது. ஏனெனில், இன்னும் ஒருநாள் அதிகம் விடுமுறை கிடைக்கும். தை’க்கு பதில் வேறொரு மாதத்தை சொல்லியிருந்தால், இன்னமும் மகிழ்ந்திருப்பேன். அதற்கும், யாராவது வராமலா போவார்கள்?

---

இன்று வாழ்த்து கூறியவர்கள் அனைவருமே, முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்து, பிறகு திருத்திக்கொண்டு தமிழில் கூறி முடித்தார்கள்.

நானும் இந்த ஒரு பதிவாவது, முழுவதும் தமிழில் பிழையில்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். சில இடங்களில் எழுதியதை அழித்து, யோசித்து மாற்ற நேரமாகிவிட்டது. ஒற்றுப்பிழைகள் இருக்கும். அதைப் பற்றி எனக்கு யாராவது சொல்லிக்கொடுத்தால், நன்றாக இருக்கும்.

.

17 comments:

ஆயில்யன் said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)


கால சூழலுக்கேற்ப நாம் மற்ற விசயங்களினை நமக்கேற்ற முறையில் மாற்றம் செய்யும்போது ஏற்படும் விளைவுகளே மஞ்சளாய்...!

சுற்றுசூழலினை உற்று நோக்கியபடி நம்மால் ஆன உதவிகளோடு தொடர்வோம் பயணத்தினை :)

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமை.

துபாய் ராஜா said...

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் said...

உங்களின் இடுகையைப் படித்தேன்.

/நானும் இந்த ஒரு பதிவாவது, முழுவதும் தமிழில் பிழையில்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். சில இடங்களில் எழுதியதை அழித்து, யோசித்து மாற்ற நேரமாகிவிட்டது. ஒற்றுப்பிழைகள் இருக்கும். அதைப் பற்றி எனக்கு யாராவது சொல்லிக்கொடுத்தால், நன்றாக இருக்கும்.
/


1.தமிழ்ப் புத்தாண்டு என்பதே சரி

சில உதாரணங்கள்

தமிழ்ச் சொல்
தமிழ்ப் படம்
தமிழ்ச் சங்கம்
தமிழ்ப் பண்பாடு
தமிழ்ப் பேரவை

2.இருக்கப் போகிறோம்

அகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலி மிகும்
(வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்)

இருக்கக் கத்துக்கணும்

போகக் கூடாது

சொல்லக் கேட்டேன்.

3.வெயிலுக்குப் ப‌ய‌ந்து
அத‌ற்குத் தான்
தை’க்குப் பதில்

நான்காம் வேற்றுமை விரியில் வ‌லி மிகும்
(நான்காம் வேற்றுமை உருபு = கு)

4.இரண்டாம் வேற்றுமை விரியில் வ‌லி மிகும்
(இரண்டாம் வேற்றுமை உருபு = ஐ)

என்னைப் பொறுத்தவரை
அலுவலகத்தைச் சுற்றி

நானும்
இன்னும் எழுத்துப்பிழையுடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.என்னுடைய இடுகைகளில் இதை விட அதிகமான எழுத்துப்பிழைகளை நீங்கள் பார்க்கலாம்

எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அன்புடன்
திகழ்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சரவணன் ...

Karthick said...

thamizh puththaandu nalvazhthukkal saravanan...

Mouna said...

tamil oru vasathi...

Mozhiyaiyum thaandi thagaval thodarbu seyya ethaenum vazhimuirai unda??

Undu..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vazhthukkal. please visit www.sirippupolice.blogspot.com

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்...

சரவணகுமரன் said...

நன்றி ஜெகதீஸ்வரன்

சரவணகுமரன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி துபாய் ராஜா...

சரவணகுமரன் said...

நன்றி திகழ். ரொம்ப விளக்கமாக சொல்லியிருக்கீங்க... ஆனாலும், சில விஷயங்கள் புரியவில்லை. உ.தா. இரண்டாம், நான்காம் வேற்றுமை.

எனக்கு ஒரு தமிழ் பண்டித் தெரியும். அவரிடம் கேட்டு தெளிய பெறுகிறேன்.

தமிழ் தேர்வின் போது என்ன செய்வேன் என்றால், எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டு, கடைசியில் க், ச், ப் என்று சேர்த்துவிடுவேன்.

சரவணகுமரன் said...

நன்றி மணி

சரவணகுமரன் said...

நன்றி கார்த்திக்

சரவணகுமரன் said...

மௌனா, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிவிட்டீர்கள்... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

சரவணகுமரன் said...

நன்றி ரமேஷ்

Gaana Kabali said...

தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர்.
சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.
சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது.
1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?