Sunday, April 4, 2010

இந்திய பணக்காரர்களின் பர்ஸை திறப்பது எப்படி?

இந்தியாவின் பெஸ்ட் செல்லர், சேத்தன் பகத், இன்றைய (04-04-2010) டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்திய பணக்காரர்களிடம் இருந்து பணத்தை உருவுவது எப்படி? என்று. ஷங்கர் படத்தில் வருவது போல், இதுவும் அறிவுபூர்வமாக இல்லாவிட்டாலும், படிக்க ஜாலியாக இருந்தது. அது இங்கே தமிழில்...

---

சமீபத்தில் நடந்த ஐபிஎல் அணி ஏலத்தில், இரு புது அணிகளை அடுத்த பத்து ஆண்டு கால உரிமைக்கு, ரூபாய் 1700 கோடிக்கு மேல் விற்ற ஐபில் தலைமை பாராட்டுக்குரியது. மூன்றே ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கை வர்த்தகத்தை உண்டாக்கியதற்கு மட்டுமல்லாமல், வாங்கியவர்களால் திரும்ப சம்பாதிக்கவே முடியாத பெரும் தொகைக்கு விற்றதற்கு!

என்னத்தான் இணையத்தில் விதவிதமாக கணக்கு போட்டாலும், இந்த அணிகளை வாங்கியவர்கள், ஒரு சீசனுக்கு கிட்டத்தட்ட 170 கோடி கொடுக்க வேண்டும். இது தவிர, வீரர்கள் சம்பளம், நிர்வாக செலவு இத்யாதிகளுக்காக மேலும் 45 சி கொடுக்க வேண்டும். அதனால், இவர்கள் லாபம் பார்க்கவேண்டுமானால், வளரும் பண மதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், இந்த அணியை வாங்கியவர்கள் ஒரு சீசனில் 215 கோடிக்கு மேல் ஐபிஎல் மூலம் வருமானம் பார்க்க வேண்டும்.

ஆனால், இதுவரை ஒரு அணி உரிமையாளரால், அதிகபட்சம் 110 கோடிக்கு மேல், சம்பாதிக்க முடிந்ததில்லை. அதனால், இந்த புது அணிகளை வாங்கியவர்கள், வாங்குவதற்கு ரொம்ப ‘ஓவராக’ கொடுத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க எந்த வணிகவியல் நிபுணரும் தேவையில்லை. குழந்தையும் சொல்லிவிடும்.



அணிகளின் மூலம் சம்பாதிக்க வேறு வழிகளும் இருக்கின்றன என்பதை ஒத்துக்கொண்டாலும், அதை தடுப்பதற்கு சில தடைக்கற்களும் உருவாகி இருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வணிகம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை சார்ந்தது. எளிதில் கணிக்க இயலாதது. மேலும் புது புது அணிகளை சேர்ப்பது, பார்வையாளர்களிடையே ஆர்வத்தை குறைக்கக்கூடும். ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஐபிஎல் கிரிக்கெட்டை பார்ப்பவர்களை விட, அதைவிட குறைந்த செலவில் தயாரிக்கப்படும் வேறு சில தொலைக்காட்சி தொடர்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் என தெரியவந்துள்ளது.

இருந்தும், இந்தியாவின் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்யங்கள், பணத்தை இதில் கொட்ட ஆர்வமாக இருக்கிறார்கள். சாதாரணமாக நமக்கே தெரியும் கணக்குகள், அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? அவர்களிடம் இல்லாத நிபுணர்களா? தெரிந்தும் எப்படி இதற்கு செலவழிக்கிறார்கள்?

இது வெறும் லாப நோக்கத்தை சார்ந்தது அல்ல. அதையும் தாண்டி, வேறு சில விஷயங்கள் இருக்கிறது. உடனடி புகழ் வெளிச்சம். இதை அவ்வளவு சுலபமாக வாங்கிவிட முடியாது. உங்களிடம் கோடி கோடியாக பணம், வங்கி கணக்கில் கொட்டிக்கிடக்கலாம். அதற்காக, உங்களால் பாலிவுட் பெரும் தலைகளுடன், கவர்ச்சி கன்னிகளுடன் உட்கார்ந்துக்கொண்டு கிரிக்கெட் பார்க்க முடியுமா? ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும் போது, ஆஸ்திரேலியா முன்னணி வீரர்களுடன் கைக்குலுக்கிக்கொள்ள முடியுமா? விளையாட்டிற்கு பிறகான பார்ட்டியில், சியர்லீடர்ஸ்களுடன் சியர் சொல்லிக்கொள்ள முடியுமா? இதை எல்லாவற்றையும் விட, இதையெல்லாம் நீங்கள் அனுபவிப்பதை உலகமே பார்க்கும் சந்தர்ப்பத்தைத்தான் உங்களால் ஏற்படுத்த கொள்ள முடியுமா?



இவை எதுவும் இல்லாமல், உங்களிடம் எண்ணெய் கிணறு இருந்தால் என்ன? விமானங்கள் இருந்தால் என்ன? கடுப்பை கிளப்பும் முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் லாபம் சம்பாதித்துக்கொடுப்பது மட்டுமா உங்கள் வேலை? பாஸு, உங்ககிட்ட பணம் இருக்குது. அது இருக்கு’ன்னு உலகத்துக்கு காட்ட வேண்டாமா? ’எரிவாயு நிறுவனம்’ வைத்திருக்கிறேன் என்று சொல்வதை விட, ‘கொச்சி குளுமை’யை வைத்திருக்கிறேன் என்று சொல்வதற்காக, ஆண்டுக்கு 100 கோடி செலவழித்தால் தான் என்ன?

அது தான் உண்மை. ஒரு ஐபிஎல் அணியை வாங்குவதின் மூலம், இன்ஸ்டண்ட் புகழ், கவர்ச்சி, இளமை, துடிப்பு இவையனைத்தையும் வாங்குகிறீர்கள். வாழ்வை தாண்டிய இமேஜை கிடைக்க பெறுகிறீர்கள். இதற்காக, வேறெந்த வரமோ, திறமையோ தேவையில்லை. பணம். அது ஒன்றே போதும்.

ஐபிஎல் மூலம் வேறு சில வணிக பாடங்கள் கிடைத்தாலும், எனக்கு இந்திய பணக்காரர்களிடம் இருந்து பணம் பெறுவது குறித்த புரிதல் கிடைக்கிறது. மேல்நாட்டினர் போலில்லாமல், இந்திய செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தில் மிக குறைந்த சதவிகிதத்தையே பொது சேவைக்கு அளிக்கிறார்கள். இது அவர்களது சொந்த ஆர்வத்தை பொறுத்ததாக இருக்கலாம். நிறைய தன்னார்வ அமைப்புகள், இவர்களிடம் இருந்து மிக சிரமப்பட்டே உதவி பெறுகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு செலவிடுவதின் மூலம், எவ்வித லாபமும் நிறுவனங்களுக்கு ஏற்பட போவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனால், இதே போல், லாபம் ஈட்டி தராத கிரிக்கெட் அணிகளுக்கோ, மகிழ்ச்சியுடன் தங்கள் பர்ஸில் இருந்து பெரும் தொகையை எடுத்துக்கொடுக்கிறார்கள். லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுடைய கௌரவத்தை கட்டி காத்தால் போதுமானதாக இருக்கிறது.



இப்படி இவர்களுடைய இமேஜை மேம்படுத்தி காட்டுவதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. இது போல, நம்மிடம் இதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது. இவர்களுடைய பெயர்களை பாலத்திற்கு வைக்கலாம், ரோட்டிற்கு வைக்கலாம், ரயிலுக்கு வைக்கலாம், ரயில்வே ஸ்டேஷனுக்கு வைக்கலாம். (சுடுகாட்டுக்கு கூட வைக்கலாம்.) இதற்கான ஏலத்தை நடத்தி, இவர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஒரு அழுத்தமான போட்டியை உருவாக்கிவிட்டால் போதும். அடுத்த நாள் பேப்பரில் பெயர் வருவதற்காக, ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு ஏலத்தில் ஜெயிக்க முயலுவார்கள். இப்படி வரும் பணம், சில நல்ல காரியங்களுக்காக பயன்படுமானால், இதில் என்ன தவறு?

இன்னும் பெரும் பணத்தை பெற, அரசு இவர்கள் பெயரை சிறிது காலத்திற்கு நாணயத்திலோ, ரூபாய் நோட்டிலோ போடலாம். சில அரசு கல்லூரிகளுக்கும் இவர்கள் பெயரை வைக்கலாம். பணத்திற்காக மட்டுமில்லாமல், தங்கள் பெயரில் இருக்கும் கல்லூரியின் தரத்தை உயர்த்த இவர்கள் முயலுவார்கள் என்பதற்காகவும். பின் தங்கள் பெயரில் இருக்கும் கல்லூரி, மோசமான கல்வி அளிப்பதை யார் தான் விரும்புவார்கள்?

குறைந்த அதிகாரம் படைத்த 'டம்மி’ பதவிகளை உருவாக்கி, அதையும் ’லம்ப்’பாக விற்கலாம். ’இரண்டாம் துணை ஜனாதிபதி’ என்பது போல ஒரு பெயர், இவர்களுக்கு ‘உர பாக்டரி அதிபர்’ என்ற பெயரை விட பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

இந்த ஐடியாக்கள் கேனத்தனமாக தெரிந்தாலும், சொல்ல வருவது புரிந்திருக்கும். ஈகோ என்பது ஒரு மனிதனுக்குள் இருக்கும் மிருகம். அவன்/அவள் எதை சாதித்திருந்தாலும், இந்த மிருகத்திற்கு தீனி தேவை. அதை சரியாக குறி வைத்து அடித்து, அணியின் மதிப்பை விட பல மடங்கு விலைக்கு விற்றதற்காகவும், அப்படி வாங்கியவர்களையும் மகிழ்ச்சியோடு சிரிப்புடன் வைத்திருப்பதற்காகவும், மோடியும் ஐபிஎல் தலைமை குழுவில் மற்றவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். இது போல், மற்ற அமைப்புகளும், அரசும், ’பெத்த பேர்’களை பெரும் தொகைக்கு விற்று, வேறு நல்ல காரியங்களுக்கு அதை பயன்படுத்த முன் வர வேண்டும்.

அதே சமயம், உங்களிடம் 1700 கோடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வருந்தாமல் உங்களுடைய ராசிக்கு நன்றி சொல்லுங்கள். பணம் அதிகம் இருந்தாலும் சமயங்களில் நல்லதிற்கல்ல. அது முட்டாள்தனமான காரியங்களை செய்ய தூண்டும். அதற்கு பதில், குதிக்கும் சியர்லீடர்ஸை டிவியில் பார்ப்பது பெட்டர்.

.

34 comments:

Prasanna said...

சிறப்பான மொழிபெயர்ப்பு..

Sundar said...

Kolgai iilatha mudalgial thol uriuthu katapaiiruku .

Evenuga , panathauka thai natyium enan sontha thayiaum koda utu koduka thayanga matunga .

Ketaa company policy illa edam irku solluvanugua

ப.கந்தசாமி said...

//குதிக்கும் சியர்லீடர்ஸை டிவியில் பார்ப்பது பெட்டர்.//

நாம ஏற்கெனவே அதைத்தான செஞ்சிக்கிட்டிருக்கோம்?

ttpian said...

IPL:
india playing loose GAME

திருவாரூர் சரவணா said...

ஆனா இந்த ஆயிரத்து எழுநூறு கோடியும் யாரோட பேர்ல எந்த வங்கி அக்கவுன்ட்டுல கிடக்கோ?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையனபதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே....

எல் கே said...

boss, nerya IPL teams social activitiesla activeea irukanga. Mumba Indians team is helping under privileged people . If you have seen their matches you can see posters regarding

Like this there are other teams doing this without much advertisments. so dont just comment for the sake of it

Senthu VJ said...

செமையா இருக்கு பாஸ்..இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன். :)

THANGAMANI said...

நன்று. வாழ்க வளமுடன்...

ராஜ நடராஜன் said...

கிரிக்கெட் வர்ணனை நன்றாக இருக்கிறது.

Robin said...

Interesting!

Anonymous said...

IPL is not really a Sporting event and investments in IPL cannot be regarded as another financial investment but it is mere gambling.

There are rumors flying all over about match fixings in IPL - so far no clear proof is available for such accusation but If at all there is something like that (I'm not saying there is something like that) - If there is a dark world behind - then I think earning the money they put in to gamble back is not at all an issue! Simple as that!

again I agree with your point IPL rather a party of cricketers & the rich than a T20 tournament! Let them enjoy! Let us enjoy watching them!

The RGR-W-PGP theory is working! (Richer Gets Richer-While-Poor Gets Poor)!

sakthi said...

Sorry to say

enaku onnume puriyalapa

Unknown said...

சும்மா தமிழ்-ல பதிவு செய்து கலக்கீடீங்க போங்க. வாழ்த்துகள்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

சூப்பர்.ஓட்டு போட்டாச்சு குமரன்.

Anonymous said...

குமரன் what a coincidence!இப்பொழுதுதான் ஒரு பதிவு போட்டேன்.அதற்கும் நீங்கள் கூறி இருக்கும் கருத்திற்கும் சம்மந்தம் உள்ளது.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பாருங்கள்.
http://perumalthiruvadisaranam.blogspot.com/2010/04/blog-post_05.html

Naresh Kumar said...

பேலன்ஸ் சீட்டில் கணக்கை நேர் செய்வது போல், ஒன்று கூட இன்னொரு பக்கம் அதை நேர் செய்ய வேண்டியிருக்கிறது!!! வெறும் புகழ்தான் என்றாலும், மல்லையா போன்ற ஆட்களுக்கு இதில் தனது பிராண்டினை உய்ர்த்திக் கொள்ளும் உத்திகளும் தெரியும்!!!

மற்ற படி சென்னை அணியை ஏலத்துல எடுத்ததுக்காகவே இண்டியா சிமெண்ட்சை வீடு கட்டறதுக்கு வாங்கும் ஆட்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை!!!

டிடிஎல்ஜேவில் துக்கடா கேரக்டரில் வரும் மந்த்ரா பேடி க்ளிவேஜை காண்பித்ததற்காக பெரிய ஆளாக்கியவர்கள், சீண்டாமல் கிடந்த மல்லிகாவை கள்ளக் காதல்(?) அல்லது கள்ளக் காமம் வைத்த கேரக்டரில் நடித்ததற்காக ஹாலிவுட்டுக்கு அனுப்பியவர்கள் - இதையெல்லாம் செய்த நம்மாட்கள் ஏலம் எடுத்ததுக்காக ஏதாவது செய்ய மாட்டார்களா என்ன???

சரவணகுமரன் said...

நன்றி பிரசன்னா

சரவணகுமரன் said...

வாங்க சுந்தர்

சரவணகுமரன் said...

கந்தசுவாமி, ஏதோ நம்மளால முடிஞ்சத பண்றோம். :-)

சரவணகுமரன் said...

ttpian, விரிவாக்கம் நல்லாயிருக்கு...

சரவணகுமரன் said...

நல்ல கேள்வி, திருவாரூரிலிருந்து சரவணன்.

கவர்மெண்ட் இப்ப மறக்காம இதுக்கும் டேக்ஸ் போடுறாங்களாம்.

சரவணகுமரன் said...

நன்றி மணி

சரவணகுமரன் said...

LK,

தகவலுக்கு நன்றி. பண்ணினா நல்லது தான். எனக்கென்ன கோபம், அவுங்க மேல? :-)

சரவணகுமரன் said...

நன்றி Senthu

சரவணகுமரன் said...

நன்றி தங்கமணி

சரவணகுமரன் said...

நன்றி ராஜ நடராஜன்... கிரிக்கெட் வர்ணனையா?!!!

சரவணகுமரன் said...

நன்றி ராபின்

சரவணகுமரன் said...

சக்தி, புரியலையா?

ஒண்ணும் பண்ண முடியாது. வேணும்’ன்னா இதோட ஒரிஜினல் ஆங்கில கட்டுரை படிச்சி பாருங்க. புரிஞ்சாலும் புரியும்.

சரவணகுமரன் said...

நன்றி புனிதா

சரவணகுமரன் said...

நன்றி அம்மு

சரவணகுமரன் said...

அம்மு,

என்னுடைய அந்த கருத்து, பின்னூட்டம் எழுதும் போது, ஒரு ப்ளோவில் தோன்றியது.

சரவணகுமரன் said...

நரேஷ்,

இவுங்க விளையாடுறத பார்த்துட்டு, ஏற்கனவே வாங்கிட்டு இருந்தவுங்களும் வேற சிமெண்ட் வாங்க போறாங்களாம். :-)

ராஜரத்தினம் said...

1700 கோடி அதை மொத்தமும் ஒரே DD எடுத்து தரவேண்டியதில்லை. அது 10 ஆண்டுகள் தொகை. தவணை முறையில்தான் எல்லாரும் கொடுப்பார்கள். அதற்கும் நிறைய வழி இருக்கிறது. 2020ல் இந்த அணியின் மதிப்பு 3000 கோடியாவது வரும். அவர்கள் பங்குசந்தைக்கு வருவார்கள். மற்ற நாட்டிலும் list செய்வார்கள். இதில் கவலை பட ஒன்றுமில்லை. என்னிடம் இருந்தால் நான் 2000கோடி கொடுத்து வாங்குவேன்.