Sunday, September 12, 2010

எந்திரன் பிசினஸ்

நேற்று சன் டிவி தலைப்பு செய்தியில் தியேட்டர்களில் வெடி வெடித்துக்கொண்டிருந்ததையும், ரஜினிக்கு ப்ளெக்ஸ் பேனரில் பால் ஊத்திக்கொண்டிருந்ததையும் காட்டிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் “இன்னைக்கா படம் ரிலீஸ்?” என்று கேட்டார்கள். “ட்ரெய்லர் ரிலீஸாம்?” என்றேன். “அதுக்கே இப்படியா?” என்றார்கள்.

பாடல் வெளியீட்டு விழா உருவான விதம் ஒளிப்பரப்பும் போது, அன்றைய தினம் ராமாயணம் போடவில்லை. ”எந்திரனுக்காக ராமாயணத்தையே கைவிட்டுட்டாங்களே?” என்று ஒரு ராம பக்தர் வருத்தப்பட்டார்.



இனி அடுத்த வாரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா உருவான விதம் வெளிவரும். தியேட்டரில் டிக்கெட் உருவான விதம், பாப்கார்ன் உருவான விதம் கூட காட்டுவார்கள்.

---

கர்நாடகாவில் கிட்டத்தட்ட பத்துக்கோடிக்கும், ஆந்திராவில் 33 கோடிக்கும் படத்தை விற்றதாக செய்திகள் வந்திருந்தன. கர்நாடகாவில் தமிழ்ப்படமாகவும், ஆந்திராவில் தெலுங்குப்படமாக ரிலீஸாவதால் இந்த விலை.

பெங்களூரில் தமிழ்ப்படங்கள் ரிலீஸ் செய்யும் தியேட்டர்கள், நல்ல லாபம் பார்த்துவருவார்கள் என்று நினைக்கிறேன். நல்ல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதோ, இல்லையோ, எண்ணிக்கையில் ஓரளவுக்கு நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும். உதாரணத்திற்கு, இந்த வாரம் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மல்டிப்ளக்ஸ் தவிர்த்து 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இது தவிர பத்து மல்டிப்ளக்ஸ் இருக்கிறது. இதிலும் கணிசமான அளவில் வெளிவரும். சாதா பாஸுக்கு இப்படியென்றால்...

படம் நன்றாக இல்லையென்றாலோ, சுமார் என்றாலோ ஒரு வாரமும், நல்ல ஹிட்டென்றால் இரண்டு வாரமும் ஓடும். சூப்பர் ஹிட் என்றால் நாலைந்து தியேட்டர்களில் நான்கு வாரம் ஓடும். சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் ஓரிரு தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடும்.

---

கர்நாடகாவில் பிறமொழி படங்கள் ரிலீஸ் செய்வதற்கு சில தடைகள் இருக்கிறது. கர்நாடகா முழுவதற்குமாக 21 திரைகளுக்கு மேல் படத்தை திரையிட தடை இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் கைட்ஸ் படத்தையும், ராவண் படத்தையும் திரையிடுவதில் சில பிரச்சினைகளை சந்தித்தது.

கர்நாடக சினிமா உலகுடன் நெருங்கிய தொடர்புடைய சுஹாசினி இது தொடர்பாக, இவர்களிடம் ராவண் படத்திற்காக பேசி பார்த்தும், ஒன்றும் முடியவில்லை. “ரஜினி படத்துக்கும் இதே கண்டிஷன் தானா?” என்று இவர் எரிச்சலில் கேட்டதாக கூட கேள்வி.

இந்த தடை தற்போது வெவ்வேறு இடங்களில் விவாதிக்கப்பட்டு, முறையான வணிக சட்டத்தின்படி முடிவில் கைவிடப்பட்டுள்ளது. கோர்ட் கேஸுக்காக, கர்நாடக திரைப்பட சங்கத்தினர் பத்து லட்சம் வெட்டியாக செலவு செய்ததுதான் மிச்சம்.

---

பெங்களூரில் ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் தியேட்டரிலேயே, எந்திரன் படத்திற்கு டிக்கெட் விலை இருநூறாம். இது கவுண்டரிலேயே. அப்ப இருநூற்றைம்பது ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் மால்களில், ஆயிரம் சொல்வார்களோ?

ஒரு மாநிலத்திற்கு பத்து கோடி என்று விற்கப்பட்ட கர்நாடகாவில் இந்த நிலை என்றால், ஒரு ஏரியாவிற்கு 13 கோடி என்று விற்கப்பட்ட மதுரையில் என்ன நிலையாக இருக்கும்? சென்னை? ரசிகன் பாவம்.

---

அருணாச்சலம் வெளிவந்தபோது, பல கோவில்களில் கவனிப்பாரற்று இருந்த ‘அருணாச்சலேஸ்வரர்’ சீரும் சிறப்புமாக கவனிக்கப்பட்டார். பாபா படத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் பாபா பக்தர்கள் உருவானார்கள். இப்பவே, சிலர் ரோபோக்களை பற்றி ஆராய்ந்து ஜப்பான் விஞ்ஞானிகள் போல பதிவெழுதி வருகிறார்கள். படம் வெளிவந்தபிறகு, இன்னும் என்னென்ன புத்தகங்கள் வரபோகிறதோ? என்னென்ன ரோபோ பொம்மைகள் வரப்போகிறதோ? படத்தின் ட்ரெய்லரில் சாரதா பதிப்பகத்தின் ‘நாலடியார்’ என்ற புத்தகத்தை காட்டுகிறார்கள். புத்தகக்கடைக்காரர்கள், அந்த புத்தகத்தை தயாராக வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த வருடம், தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் ’ரோபோட்ரானிக்ஸ்’ என்றொரு பாடப்பிரிவு வந்து, கவுன்சலிங்கில் அதற்கு கூட்டம் மொய்த்தாலும் மொய்க்கும். நல்லது நடந்தா சரி.

.

22 comments:

Unknown said...

பாஸ் அந்தத் தியேட்டர் பாலாபிஷேகம் எல்லாம் சன் பிக்சர்ஸ் செட்டப்னு நம்பகமான தகவல் ஒன்னு வந்திருக்கு.

இப்பெல்லாம் அரசியல் கட்சிகள் மாதிரி ரசிகர்களையும் செட்டப் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க வினியோகஸ்தர்கள்.

ravikumar said...

nice to read

SP said...

unmaiyave atha parkum pothu kovam than vanthuchu
yen epadi erukanga elarum
orutharuku rasikara erukarathu thapu ella athu veriya eruka koodathu
avaruku power eruku elenu solala athukaka epadi yellam seya koodathu
miga miga vethanayana visayam

எஸ்.கே said...

ரொம்ப ஓவரா பில்டப் தராங்க... படம் ஓடாமப் போகலாம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பாஸ் அந்தத் தியேட்டர் பாலாபிஷேகம் எல்லாம் சன் பிக்சர்ஸ் செட்டப்னு நம்பகமான தகவல் ஒன்னு வந்திருக்கு. //

correct!!!

Unknown said...

//ரொம்ப ஓவரா பில்டப் தராங்க... படம் ஓடாமப் போகலாம்//

பேஸ்மன்ட் வீக் பில்டிங் ஸ்ட்ராங்....
பேஸ்மன்ட் ஸ்ட்ராங் பில்டிங் வீக்....
பேஸ்மன்ட் வீக் பில்டிங் வீக்
பேஸ்மன்ட் ஸ்ட்ராங் பில்டிங் ஸ்ட்ராங்
டோட்டல் வீக்'கா போனா???

சி.பி.செந்தில்குமார் said...

good post.ovr build up must get fail.

butterfly Surya said...

haaahaha.. அருமை நண்பா..

Let us wait and see..

ஆனா இதையே வச்சு நீங்க ஒரு பதிவு போட்டுடீங்க..

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

படம் வெளியானதும் இந்த வார பத்திரிகைககள் அடிக்க போற கூத்துகள் தான். நல்ல பஜனை கேட்கலாம்..

butterfly Surya said...

என்னுடைய பயமெல்லாம் இந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லைன்னு யாராச்சும் தற்கொலை பண்ணிக்க போறாங்க..

கானா பிரபா said...

;)

Krishna said...

I have been reading some of comments. Most of you love to see this movie fail. When avatar first trailer was released, the comments it gathered was purely negative. In fact the most people in some forums posted that James is gonna screw up this high budget movie and in the end you all know what happen.

All this build up is because of sun tv(kalanithi). Not rajini or shankar. Their previous shivaji was not under Sun TV so this is a some sort of a make for that. From the way they doing this i think sun tv already have seen this movie and have some confidence in it.

Mr saravanan, being a rajini fan i don;t know why there is a need for you to write this.
Dont feel like watching this movie, then don;t watch'it.
If sun tv is pissing you off or you find it irritating with enthiran promos, there are plenty of other channels to choose from your remote.
You are just giving an opportunity for anti rajini fans ( mostly kamal fans) to post some nonsense as their comments.We all know how badly they wish this movie fail.


//
பாஸ் அந்தத் தியேட்டர் பாலாபிஷேகம் எல்லாம் சன் பிக்சர்ஸ் செட்டப்னு நம்பகமான தகவல் ஒன்னு வந்திருக்கு.
//

Set up for what, are you telling me this is the first time you are seeing this in your life?
Superstar movie already had this kind of celebration for a long long time ago. Even ajit fans are doing these for ajit movies recently.

சரவணகுமரன் said...

முகிலன்,

என்னவெல்லாம் செட்டப் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க...

சரவணகுமரன் said...

நன்றி ரவிக்குமார்

சரவணகுமரன் said...

லூஸ்ல விடுங்க, SP

சரவணகுமரன் said...

ஓவர் பில்டப்-பினால் ஹைப் திகட்ட ஆரம்பித்து விட்டது எஸ்.கே.

சரவணகுமரன் said...

வாங்க ரமேஷ்

சரவணகுமரன் said...

ஆகாயமனிதன்,

ஷங்கர் ஸ்ட்ராங்காதானே கட்டி இருப்பாரு?

சரவணகுமரன் said...

நன்றி செந்தில்குமார்

சரவணகுமரன் said...

நன்றி சூர்யா

சரவணகுமரன் said...

//என்னுடைய பயமெல்லாம் இந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லைன்னு யாராச்சும் தற்கொலை பண்ணிக்க போறாங்க..//

நீங்க சொல்றத பார்த்தா, அதுக்கும் செட்டப் பண்ணிட போறாங்க’ன்னு பயமாயிருக்கு...

சரவணகுமரன் said...

வாங்க கானா பிரபா

சரவணகுமரன் said...

கிருஷ்ணா,

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

படம் தோற்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. எப்படியும் படத்தை நான் பார்க்கத்தான் போகிறேன்.

படத்தை வைத்து சம்பாதிக்கும் வழிகளை பற்றி தான் எழுதினேன். நீங்கள் சொல்வதுபோல், இந்த கூத்தெல்லாம் எல்லா ரசிகர்களும் செய்வது தான். ஆனால், ட்ரைய்லர் வெளியீட்டு விழாவிற்கு செய்வது, இதுதான் முதல்முறை.