Thursday, December 18, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 1

பதிவு படிச்சு கார் ஓட்டுறதான்னு நினைக்காதீங்க. நீச்சல் கத்துக்கறதுக்கே புக் இருக்கு. அது மட்டும் இல்ல. இப்ப நம்மாளுங்க எதுக்கெடுத்தாலும் கூகிளத்தான் கேட்கிறாங்க. அப்படி, பின்னாடி வருற சந்ததியினருக்கு உபயோகமா இருக்குமேன்னுதான். ஓட்டுறீங்களோ இல்லையோ, நான் ஓட்டுன கதைய கேளுங்க.

கத்துக்கொடுக்குற கார்ல ரெண்டு கிளட்ச், ரெண்டு பிரேக் இருக்குது. ஒண்ணு நமக்கு.இன்னொண்ணு மாஸ்டருக்கு. முத நாள், அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க தொட வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு. ஸோ, ஆக்ஸிலேட்டரை மட்டும் மிதிச்சிக்கிட்டு, ஸ்ட்யரிங்க மட்டும் பிடிச்சிக்கிட்டு ஓட்டுனேன். அம்யூஸ்மெண்ட் பார்க்குல ஓட்டுற கார் மாதிரி இருந்திச்சு.

ஒரு இடத்துல வண்டிய நிறுத்த சொல்லிட்டு, கேள்வி கேட்க போறேன்னு சொன்னாரு. ஆஹா! இது வேறயான்னு நினைச்சிக்கிட்டு கேளுங்கன்னு சொன்னேன். சிக்னல் காட்ட சொன்னாரு. காட்டுனேன். அப்புறம் ஒரு சிம்பிளான கேள்வி கேட்டாரு. நாந்தான்ன்ன்...

“இந்த கார் எதுல ஓடுது?”

“ரோட்டுல”

“இல்ல... எதுல ஓடுது?”

யோசித்துவிட்டு, “இன்ஜின்... டார்க்...”

“ம்ஹும். நான் சொல்லுறது புரியுதா?”

“ம்ம்ம்... புரியுது”

“எனக்கு தமிழ் கொஞ்சம் சுமாராத்தான் வரும்”

“இல்ல.. நல்லாத்தான் பேசுறீங்க... நீங்க பேசுறது ரஜினி மாதிரி இருக்கு”ன்னு ஒரு பிட்ட போட்டேன்.

நான் அவரு பேசுனது புரியல்லன்னு சொன்னத புரியுதுன்னு சொன்னதா தப்பா புரிஞ்சிக்கிட்டாரு.

மனுசன் சந்தோஷமாயிட்டாரு. “நானும் கிருஷ்ணகிரி பக்கம்தான். சரி, கார் எப்படி போகுது?”

“ஆக்ஸிலேட்டர மிதிச்...”

“இல்ல”

நான் முழிக்குற முழிய பார்த்திட்டு, “காத்து”ன்னாரு.

“ஆஅன்” - இது நான்.

“டயருல இருக்குற காத்து”

இவரு வேற... காலங்காத்தால் கடுப்புகள கிளப்பிக்கிட்டுன்னு நினைச்சிக்கிட்டு, “ஓகே”ன்னேன்.

”நீங்க ஒரு ஊருக்கு போயிட்டு இருக்கீங்க... அப்ப ஒரு பாலத்துக்கு கீழே போக வேண்டி இருக்கு... பாலத்துக்கு கீழே போனீங்கன்னா, மேலே தட்டும். எப்படி போவீங்க?”

???

“கண்டிப்பா போகலாம். எப்படி போவீங்க?. போயிட்டு திரும்ப ஊருக்கு போகணும்.”

”காத்த கொஞ்சம் இறக்கி விட்டுட்டு போவேன்.”

“கரெக்ட்”

“காத்த இறக்குனா திரும்பி எப்படி ஊருக்கு போறது?” என் சந்தேகத்த கேட்டேன்.

“அதெல்லாம் போயிடலாம்”

!!!

அப்புறம் சில கேள்விகள கேட்டேன். அதுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாரு.

1) டிரைவர் சீட்ல உட்கார்ந்து ரோட்டு ஓரத்த, வைப்பர் கண்ணாடிய டச் பண்ணுற பாயிண்டோட ஓப்பிட்டு, வலது டயர் போற இடத்த கணிச்சிக்கலாம்.
2) ஸ்பிட் பிரேக்கர்ல ஆக்ஸிலேட்டர விட்டுடுங்க.
3) டர்னிங் திரும்பினத்துக்கு பிறகு, திருப்பின ஸ்ட்யரிங்க முழுமையா திருப்பிடுங்க.
4) ஏதும் பிரச்சினை ஆச்சுனா, ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போன் பண்ணனும். அப்புறம், போலீஸ்.

கியர், கிளட்ச், பிரேக் எல்லா கண்ட்ரோலும் அவர் கை, கால்ல இருந்ததால, எனக்கு பெருசா ஏதும் வேல இல்ல. சும்மா பேசிட்டு ஓட்டிட்டு (கார) இருந்தேன்.

”நீங்க ஃபுல் டைம் கார் டிரைவிங் ட்ரேயினிங்தானா?”

“ஆமாம் சார். முன்னாடி கார் டிரைவராகவும் வேல பார்த்தேன். இப்ப, இது மட்டும்தான்”

“ஏன்?”

“ஆக்ஸிடெண்ட், ரத்தம்... தொடர்ந்து இதையே பார்த்து பார்த்து சலிச்சு, பயந்து டிரேயினிங் மட்டும் கொடுக்கலாம்ன்னு வந்துட்டேன்”

”அதுக்கு என்னங்க பண்ணுறது?”

”ஒண்ணும் பண்ண முடியாது, சார். இப்ப முன்னாடி போறாரே... அவரு சட்டுன்னு கீ்ழே விழுந்துட்டாருன்னா... இப்ப நம்மளாள கண்ட்ரோல் பண்ணி நிறுத்த முடியுமா?”

நான் எங்கே கண்ட்ரோல் பண்ணுறது? என் கையில ஸ்ட்யரிங். கால்ல ஆக்ஸிலேட்டர். அவ்ளோதான்.

“நாமெல்லாம் கொசு மாதிரி சார்... ஒண்ணும் பண்ண முடியாது”

“ம்ம்ம்...”

”முதல்ல உங்கள காப்பாத்திக்கோங்க... அப்பத்தான் மத்தவங்கள பாத்துக்க முடியும்”

அசால்ட்டா தத்துவம் சொல்லுறாரே.

“பைக்குல போயி யாரையாச்சும் இடிச்சிங்கன்னா, அதிகபட்சம் அடிதான் படும். உயிருக்கு ஆபத்து இல்ல. காரு அப்படி இல்ல. அதே மாதிரி, கார்ல போயி ஏதும் தப்பு நடத்துச்சுன்னா, தப்பு உங்க மேலே இல்லனாலும் உங்களுக்கு தான் அடி படும். ஏன்னா, சைக்கிள்-பைக் இடுச்சிக்கிட்டுன்னா சைக்கிள்காரன் நல்லவன். பைக்-கார் இடுச்சிக்கிட்டுன்னா பைக்காரன் நல்லவன். இதுதான் நம்ம ஊரு நியாயம்.”

அப்படியே, சமூக கருத்தும் சொல்லுறாரே.

“அதுவும் இந்த ஊருக்காரங்க இருக்காங்களே. மோசமானவங்க.” கடந்த சென்ற கிராமத்தை பற்றி சொன்னார்.

முதல் நாள் கத்துக்கொண்டவை.

1) ஆக்ஸிலேட்டர் எப்படி, எங்க மிதிக்கணும்.
2) ஸ்ட்யரிங் எங்க, எப்படி திருப்பணும்.
3) ஹாரன் அடிக்குறது.
4) இண்டிக்கேட்டர் போடுறது.
5) வைப்பர் எப்படி யூஸ் பண்ணுறது.

அப்புறம் முக்கியமானது ஒண்ணு,

ஆன்/ஆஃப்

(தொடரும்)

5 comments:

DHANS said...

நான் எழுதலாம் என்று நினைத்த பதிவு... வாழ்த்துக்கள்
பின்னூட்டத்தில் என் கருத்தை சொல்கிறேன்.

வைபர் கண்ணாடியின் ஐடத்தை வைத்து இடது புறம் உள்ள டயரின் இடத்தை அனுமானிக்கலாம்.

முன்னால் நிற்கும் வாகனத்தின் நம்பர் பலகை மறைந்து போகும்போது வண்டியை நிறுத்தினால் நமது காருக்கும் முன்னாலுள்ள வண்டிக்கும் இடையே குறைந்தது ஐந்து அடி இடமிருக்கும்.

பைக்காரன் குறுக்கே வந்து நின்றால் நான் பொறுப்பல்ல

மேலும் அறிந்துகொள்ள

http://driving-india.blogspot.com/

DHANS said...

நான் எழுதலாம் என்று நினைத்த பதிவு... வாழ்த்துக்கள்
பின்னூட்டத்தில் என் கருத்தை சொல்கிறேன்.

வைபர் கண்ணாடியின் இடத்தை வைத்து இடது புறம் உள்ள டயரின் இடத்தை அனுமானிக்கலாம்.

முன்னால் நிற்கும் வாகனத்தின் நம்பர் பலகை மறைந்து போகும்போது வண்டியை நிறுத்தினால் நமது காருக்கும் முன்னாலுள்ள வண்டிக்கும் இடையே குறைந்தது ஐந்து அடி இடமிருக்கும்.

பைக்காரன் குறுக்கே வந்து நின்றால் நான் பொறுப்பல்ல

மேலும் அறிந்துகொள்ள

http://driving-india.blogspot.com/

சரவணகுமரன் said...

நல்ல உபயோகமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

ambi said...

நல்ல உபயோகமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஹை. தொடருங்கள்.... :)

சரவணகுமரன் said...

நன்றி ambi