Friday, December 19, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 2

ஆன்/ஆஃப் சொன்னேன், இல்லையா? அது ஒண்ணும் சாதாரணமானது இல்ல. கீயை வலது பக்கம் திருப்பினா, ஆன். இன்ஜின் ஸ்டார்ட் பண்ண, இன்னும் வலதுபக்கம் திருப்பிட்டு விட்டுடணும். கீ பழைய நிலைக்கு வந்துடும். இப்ப ஆஃப் பண்ணுறதுக்கு, இடது பக்கம் திருப்பணும். இன்ஜின் ஸ்டார்ட் பண்ணினத்துக்கு பிறகு, திரும்பவும் வலது பக்கம் திருப்பினா அது வண்டிக்கு நல்லது இல்ல. ஏகப்பட்ட காரணம் சொன்னாரு. சுருக்கமா, ஒடுற டயருக்குள்ள கால விடுற மாதிரின்னாரு. வண்டிக்கு செலவு வைச்சுடும்ன்னாரு. சரிதான்னு கேட்டுக்கிட்டேன்.

இன்னிக்கு சொல்லிக்கொடுக்க போறது, கிளட்ச், கியர், பிரேக் பத்தி. கால்ல மிதிக்க மூணு சமாசாரங்கள் இருக்குது. பர்ஸ்ட், கிளட்ச். செகண்ட், பிரேக். அப்புறம், ஆக்ஸிலேட்டர். இடது காலுக்கு, கிளட்ச்ச கொடுத்துடணும். வலதுகாலுக்கு, ஓட்டும்போது ஆக்ஸிலேட்டர். நிறுத்தும்போது, பிரேக்.

இடதுகைக்கு வேல கொடுக்கபோறது, கியர். கார்ல மொத்தம் அஞ்சு கியர்ஸ். ஒண்ணு ரிவர்ஸ் கியர். கீழே கொடுத்திருக்குற படத்த பாருங்க. இதுல, 1-2, 3-4, R இதையெல்லாம் இணைக்குற கோடு பூரா நியூட்ரல்தான். ஏதாவது கியர்ல இருந்து எடுத்து விட்டா, அதுவா மூணுக்கும் நாலுக்கும் இடையே இருக்கும் இடத்துக்கு வந்துடும்.சரி. வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு நாமலே எப்படி போறது?

1) முன்னாடியே சொன்ன மாதிரி ஆன் பண்ணுங்க. இன்ஜின் ஸ்டார்ட் பண்ணுங்க.
2) கவுண்டமணி செந்தில பண்ணுவாரே, அந்த மாதிரி மிதிக்காம, மெதுவா கிளட்ச்ச மிதிங்க. விட்டுடாதீங்க.
3) பர்ஸ்ட் கியருக்கு இடது கைல இருக்குற குச்சியை தள்ளுங்க.
4) கிளட்ச்ச ,மெதுவா விடுங்க.
5) ஆக்ஸிலேட்டர விடவே தேவையில்லை. கிளட்ச்ச விட்டாவே வண்டி மூவ் ஆகும்.

ஆக்ஸிலேட்டர் கொடுக்காம கிளட்ச்ச விட்டே, என்ன நடக்குதுன்னு பார்க்க சொன்னாரு. வண்டி மூவ் ஆச்சு. பைக்ல இப்படி இருக்காது. ஆனா, பெரிய வண்டி எல்லாத்திலையும் இப்படித்தான்னு சொன்னாரு. அப்புறம், ஆக்ஸிலேட்டர் மிதிக்கவும் வண்டி கொஞ்சம் வேகம் எடுத்தது.

கொஞ்சம் தூரம் போனதும், ஆக்ஸிலேட்டார்ல இருந்து கால்ல எடுத்திட்டு, கிளட்ச்ச மிதிச்சு ரெண்டாவது கியர் போடணும். முதல் கியர்ல இருந்து ரெண்டாவது கியருக்கு அப்படியே போய்டலாம்.

போடும்போது, நடு கோட்ட தொட்டு போறதால, நியூட்ரலுக்கு போயிட்டுதான் போகுதாம்.

அப்புறம் இப்ப வர்ற சில கார்ல கிளட்ச் கிடையாதாமே? அப்படியா? தவிர, கியர் வடிவமைப்பும் நேரா இருக்குமாம். உதாரணத்துக்கு, ஹூண்டாய் ஐ10? தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

”எவ்ளோ தூரம் இப்படி ரெண்டாவது கியர்ல போகணும்?”

“சீக்கிரம் மூணாவது, நாலாவதுக்கு போனா நல்லதுதான். பெட்ரோலும் ரொம்ப குடிக்காது. வண்டிக்கும் நல்லதுதான்.”

“போகட்டுமா?”

“வேண்டாம். வேண்டாம். இப்பதானே கத்துக்கிறீங்க. அப்படியே மெதுவா ஓட்டுங்க. வேகமா போனா எதுவும் கத்துக்க முடியாது. மெதுவா போகும்போதுதான் நுணுக்கங்களை துல்லியமா கவனிக்கலாம். கத்துக்கலாம்”

ஒகே. பாஸ்.

பிறகு, நாலைஞ்சு இடத்துல வண்டிய நிறுத்தி ஆப் பண்ணி, திரும்ப கிளப்புறதுக்கு பிராக்டீஸ் கொடுத்தாரு. அப்படியே, போயிட்டு இருக்கப்போ, அவரு சொல்லாமலே கொஞ்சம் வேகம் கொடுத்தேன். வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்லி வேகத்தை குறைக்க சொன்னாரு. நானும் குறைச்சேன். ஸ்கூல்க்கு போற ரெண்டு பிள்ளைங்க சைக்கிளில என்னை முந்திக்கிட்டு போனாங்க.

(தொடரும்)

15 comments:

DHANS said...

கிளட்ச் இல்லாத கார்கள் எல்லாமுமே தானியங்கி கியர் உள்ளவை, சான்றோ, i10, ஹோண்டா சிட்டி (ஹோண்டா வில் எல்லா கற்களும் இத்தகைய தானியங்கி வகையிலும் வருகின்றன)

இத்தகைய கார்களில் நீங்கள் வேகம்குடுக்ககூடிய அளவை பார்த்து தானாகவே கிளட்ச் இயங்கி, சரியான கியருக்கு கார் மாறிவிடும். வேகத்திற்கு ஏற்ப கியர் மாறிக்கொள்ளும் அனால் இத்தகைய கார்கள் விலை சிறிது அதிகம், மேலும் சிறிது அதிக எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.

கியர் பாக்ஸ் ரிப்பேர் ஆனால் செலவு அதிகம் பிடிக்கும் மற்றும் சரி செய்வது கடினம்.

DHANS said...

பியட் கார்களில் வண்டியை ஸ்டார்ட் பணிவிட்டால் மறுபடியும் சாவியை வலதுபுறமாக திருப்ப முடியாது, வண்டியை ஆப் செய்து சாவியை பழைய நிலைக்கு இடது புறம் இறுதிவரை கொண்டு சென்றால் மட்டுமே மறுபடியும் ஸ்டார்ட் ஆகும்.

பின்னோக்கி செல்லும் கியருக்கும் ஒரு தடை இருக்கும், தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட முடியாது.


வண்டியில் ஏறும்போது முதலில் அனைத்து கனாடிகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக்கொண்டு, பின்னர் சீட் பெல்ட் அணிந்துகொண்டு மட்டுமே செலுத்த வேண்டும்.

சரவணகுமரன் said...

ரொம்ப நன்றிங்க, DHANS... எனக்கு கார் கத்து கொடுத்தவன் கூட இவ்ளோ சொல்லி கொடுக்கல... :-) அடிக்கடி வந்து இப்படி ஏதாச்சும் சொல்லுங்க...

Anonymous said...

ஆட்டோமேடிக் கார்களின் ground clearnce குறைவு. தற்போது நம் சாலைகள் உள்ள நிலையில், தானியிங்கி வகையில் உள்ள வண்டிகள் வாங்குவது சற்று சரியல்ல.

இப்போதெல்லாம் 6 கியர் வண்டிகள் வந்துவிட்டன். 5 பார்வேர்ட், 1 ரிவர்ஸ் கியர்.

ரிவர்ஸ் கியர் பொஸிசன் ஒவ்வொரு வண்டிகளுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். வண்டி வாங்கும் போதே இதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

Anonymous said...

Hi,

Nice tutorial.
Online tutorial for driving ;)

Enjoyable post.
Nice blog and Keep it up.

:-)
Insurance Agent

வடுவூர் குமார் said...

பாலகுமாரன் ஒரு கதையில் அவர் நாயகி கார் கற்றுக்கொள்வதை அழகாக சொல்லியிருப்பார்,அந்த ஞாபகம் வந்தது.

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி, இராகவன்.

சரவணகுமரன் said...

நன்றி Bendz

சரவணகுமரன் said...

நன்றி வடுவூர் குமார்

Adriean said...

சரவணகுமரன், மிகவும்சுவையாக கார் பழகும் அனுபவத்தை எழுதியுள்ளீர்கள்.
DHANS,பயனுள்ள தகவல்கள் தந்துள்ளீர்கள்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பத்து நாட்களா????

நான் இரண்டு நாட்களில் கற்றுக் கொண்டு மூன்றாம் நாள் தனியாக ஓட்ட ஆரம்பித்து விட்டேன் !
ஆனால் சுவையான முறையில் சொல்லியிருக்கிறீர்கள்!

DHANS said...

நன்றி சந்திரன்,

எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான்

சரவணகுமரன் said...

நன்றி chandran

சரவணகுமரன் said...

//பத்து நாட்களா????//

கிளாஸ் பத்து நாளு. பத்து நாளு அனுபவத்தையும் எழுதலாம்னு இருக்கேன். அதான் இந்த தலைப்பு.

Unknown said...

4Th கியர்ல போய்டு இருக்கும் போது இரண்டவது கியர் மாற்றலாமா முன்றாவது கியர் மாற்றமால் சொல்லுக