Saturday, December 20, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 3

"பாஸ்... நீங்க டெய்லி பைக் ஓட்டுறீங்களா?”

“ஆமாம்.”

“கொஞ்சம் வேகமா ஓட்டுவீங்களோ?”

ஹி...ஹி...

”கார அப்படியெல்லாம் ஒட்டக் கூடாது. பைக்க சந்து பொந்துல எல்லாம் ஓட்டுவீங்க. இத அப்படி ஓட்ட முடியாது. நீங்க அப்படி போறப்ப, கார்க்காரன் ஒங்கள திட்டியிருப்பான். நாளைக்கு நீங்க அந்த மாதிரி ஒரு பைக்காரன திட்டுவீங்க. ரோட்டுல ஒரு கல் கெடந்திச்சின்னா, பைக்குல வளைச்சிக்கிட்டு போவீங்க. இப்ப, ஒரு கல் இருந்தாலும், நீங்கதான் மெதுவா போகணும்.”

முத நாளு காத்துதான் வண்டிக்கு முக்கியம்ன்னு சொன்னாரு இல்ல. அது ஏன்னா, காத்து இல்லனா வண்டி ஓடாதான். ஓடும்போது காத்து போச்சினா, வண்டி தலைகீழா விழ கூட சான்ஸ் இருக்காம்.

அப்புறம் இன்னொண்ணு சொல்ல மறந்திட்டேன். முத நாளே போயி, லெனர் லைசன்ஸ் போட்டுடுங்க. அப்பதான், 30 நாளு கழிச்சி லைசன்ஸ் எடுக்க வசதியா இருக்கும்.

இன்னைக்கு, தலைவரு இரண்டு விஷயம் சொல்லி கொடுத்திட்டு அத பிராக்டிஸ் பண்ண சொன்னாரு.

மேடான பகுதில, வண்டிய ஆப் பண்ணிட்டு எப்படி ஸ்டார்ட் பண்ணனும்ன்னு. சமதளத்தில் ஓட்டும்போது, பிரேக்க பிடிக்க தேவையிருக்காது. ஸோ, கிளட்ச்ச மட்டும் விடுவீங்க. ஆனா, மேட்டு பகுதில, பிரேக்க பிடிச்சிட்டு இருப்பீங்க. அந்த சமயம், கிளட்ச்ச விட்டாலும் வண்டி போகாது. பிரேக்க விட்டா வண்டி பின்னாடி போகிடும். அப்ப என்ன பண்ணுறது?

கொஞ்சம் நேக்கா, கிளட்ச்ச விட்டுட்டு வண்டி லேசா உறுமுற சமயம், பிரேக்குல இருந்து கால எடுத்திட்டு, ஆக்ஸிலேட்டர லேசா மிதிங்க. ஸிங்க் வருற வரை இதுக்கு பிராக்டிஸ் தேவை.

அடுத்தது, வண்டிய எடுத்து பின்னாடி திருப்புறதுக்கு பிராக்டிஸ்.பின்னாடி திரும்பும்போது பின்கண்ணாடி வழியா பார்த்திட்டே திரும்பணும். ரிவர்ஸ் கியர்ல வண்டி கொஞ்சம் ஸ்பீடாவே போகும். அதனாலே கவனம் தேவை.

”நான் எப்ப நானே தனியா வண்டிய ஓட்டலாம்?”

“எட்டு நாளு கழிச்சு ஓட்டலாம். ம்ம்ம்ம்... நாளைல இருந்துகூட ஓட்டலாம்.”

எனக்கென்னமோ அப்படி தோணலை. திரும்பும்போது, கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு.

இன்னைக்கு காருகள பத்தி சொன்னாரு. ஒவ்வொரு கார பத்தியும் சொன்னாரு. மாருதி 800 தான் ரொம்ப சேல்ஸ் ஆன வண்டின்னு சொன்னாரு. சாண்ட்ரோல எலக்ட்ரானிக் சமாச்சாரம் அதிகம்ங்கறதால, ரிப்பேர் பார்க்க கொஞ்சம் கஷ்டம்ன்னாரு.இப்ப வர்ற கார்ல, இன்ஜின் வெயிட் கம்மி. ஆனா, பவர் அதிகம்ன்னாரு. நான் வண்டி ஓட்டுறதுல கவனமா இருந்ததால, அவ்ளோவா அவரு பேச்ச கவனிக்க முடியல. சும்மா உம் கொட்டிட்டு இருந்தேன்.

கார் ஓட்டும்போது யாராவது கூட இருந்தா நல்லதாம். தனியா போறத விட, கூட யாராவது இருக்கும்போது கொஞ்சம் அதிகம் அலெர்ட்டா இருப்போமாம். நைட் ஓட்டும்போது, யாராவது கண்டிப்பா இருக்கணுமாம். நான் கூட எப்பவாவது ஊருக்கு கார்ல போகும்போது, டிரைவர் கூட பேசிட்டே வருவேன். அப்படியே, டிஜே மாதிரி பாட்டு செலக்ட் பண்ணுறதும் நாந்தான்.

நைட் ஓட்டும்போது டயர்டா இருந்திச்சுனா, வேற யார்ட்டயாவது கொடுத்துடுங்க. அப்படி யாராச்சும் இல்லனா, ஒரு பாதுகாப்பான இடத்துல நிறுத்திட்டு, லைட்டா ஒரு தூக்கத்த போட்டுட்டு போங்க.

எல்லா காருலையும் வீல் இணைப்பு ரொம்ப காலத்துக்கு அப்படியே டைட்டா சிக்குன்னு இருக்காதாம். அடிக்கடி சர்வீஸ் அப்ப, அத கவனிக்கணும். இல்லாட்டி, உங்களுக்கு முன்னாடி அது ஒடிட்டு இருக்கும்னாரு. எனக்கு கரகாட்டகாரன் தான் ஞாபகம் வந்தது.

(தொடரும்)

15 comments:

வடுவூர் குமார் said...

LLC போட்டுட்டு 6 மாதம் கழித்து கூட டெஸ்ட் வைத்துக்கொள்ளலாமாம்,நான் அப்படித்தான் செய்துவிட்டு வந்திருக்கேன்

சரவணகுமரன் said...

ஆறு மாதத்திற்குள் தானே எடுக்க வேண்டும்? இல்லாவிட்டால் மீண்டும் LL எடுக்க வேண்டி இருக்குமே?

வருகைக்கு நன்றி வடுவூர் குமார்.

DHANS said...

மன்னிக்கவும் தாங்கள் கார் ஊட்ட கற்றுக்கொள்வது மகிழ்ச்சியனதே அனாலும் முறையான இடத்தில் நீங்கள் பயிற்சி செய்யவில்லை என்று தோன்றுகிறது.

முதலில் நீங்கள் LLR எடுத்துவிட்டுத்தான் கார் ஊட்ட கற்றுக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். கற்றுக்கொள்ளும்போது பழகுனர் உரிமம் இருப்பதும், ஓட்டுனர் உரிமம் இருப்பவர் அருகில் இருப்பதும், வண்டியில் முன்னும் பின்னும் L என்ற எழுது இருப்பதும் விதி. நான் கற்றுக்கொண்ட இடத்தில் இவையெல்லாம் சொல்லி, LLR முடித்து வந்துதான் வண்டியில் ஏற்றினார்கள்.

உங்கள் வாதியாரிடன் சொல்லுங்கள் முதலில் விதிகளை மதிக்க சொல்லி.

கார் ஓடும்போதுதான் பைக் ஓடும்போது செய்த மற்றும் செய்யும் தவறுகள் புரியும்.

இப்போதெல்லாம் tubelesss டயர்கள் வந்துவிட்டன, வெடிப்பது என்பது வெகு அளவில் குறைந்துவிட்டது, பஞ்சர் அனாலும் இருபது கிலோமீட்டர் வரை ஊட்டி செல்லலாம் காற்று வெகுவாக இறங்காது.

மேடான பகுதியில் வண்டியை ஏற்றி பழகும்போது முதலில் handbreak போட்டு நகர்த்தி பழகவும். முறையான பழக்கம் அதுதான், hand break போட்டு பின்னர் வண்டியை கிளட்சை விட்டு மெதுவாக நகர்த்தவும் வண்டி நகர முர்ப்ப்படும்போது hand break ரிலீஸ் செய்து நகர்த்தவும். பின்னர் மெதுவாக நீங்கள் சொல்லிய முறையை கற்றுக்கொல்லுங்க.

பின் கன்னடிய பாத்துகிட்டே திருப்புரதுதான் நாளது அனாலும் உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி பார்த்துக்கொள்ளலாம். மற்றவரை இடிக்காமல் எல்லா பக்கமும் உறுதிசெய்து பின்னால் எடுப்பது போதும்.

நான் இரண்டாம் நாளே கார் எடுத்தேன். அனாலும் வகுப்பு முடிந்து ஓட்டுனர் உரிமம் வரும்வரை கார் எடுக்காமல் இருந்து பின்னர் எடுத்தேன். முதலில் உங்களுக்கு பயம் இருந்தால் அதைகுரைத்து தைரியமாக வண்டியை எடுங்கள், மற்றவரை பாதிக்காத வகையில் மற்றேஅவரையும் மதித்து வண்டி ஓடும் அளவிற்கு எண்ணம் இருந்தால் போதும் நீங்கள் வண்டி எடுக்கலாம்.

maruti 800 எல்லாம் அதிகமாக விட்டது அந்த காலம். இப்போது alto அதிகமாக விக்கிறது. அனால் இவை எல்லாம் 800 CC என்ஜின் (வெறும் மூன்று சிலிண்டர் மட்டுமே கொண்ட என்ஜின்). நீண்ட தூரமோ அதிக வேகமோ செல்ல இயலாது.
சான்றோ எலக்ட்ரானிக் சமாசாரம் என்பது எல்லாம் இல்லை, வெறும் ஸ்டீரிங் மட்டுமே எலக்ட்ரானிக் ஸ்டீரிங் மீதி எல்லாம் மாற்ற காரில் இருப்பவைதான் எளிதாக ரிப்பேர் செய்யலாம்.

பாதுகாப்பு போன்றவற்றில் மாருதி ஹுண்டை எல்லாமே சிறிது பின் தங்கி உள்ளது, போர்த், பியட் ஓபல், செவ்ரோலடே போன்ற அமெரிக்க ஐரோப்பிய கார்கள் பாதுகாப்பில் சிறந்தவை, இந்த வண்டிகள் எடை அதிகமாகவும் தகரம் அதிக திக்கனதாலும் செய்யப்பட்டு இருக்கும் அனல் இவை லிட்டருக்கு குறைவான கிலோமீட்டர் குடுக்கும் காரணம் எடை.

காரோட்டும்போது கூடவே இருப்பது நல்லது அனாலும் அதுவே சில சமயம் தோன தோன என்று பேசக்கூடிய ஆளாக இருந்தால் கொடுமை. ஓடுவதற்கு உதவியாக இருப்பவர் எப்போதும் அருகில் இருப்பது நல்லது. இரவில் ஓடும்போது சதம்மேதுவாக வைத்து மெலடி பாடல்கள் சிறந்தது ஏனென்றால் சத்தம் அதிகமாக வைத்து புதிய பாடல்கள் கேட்கும்போது எதிரில் வரும் வண்டியின் வெளிச்சம் மற்றும் சத்தம் ஓடுபவருக்கு தலை வலியை வரவழைக்கும்.

ரொம்ப பெரிய பின்னூட்டம் மன்னிக்கவும். எழுது பிழை திருத்தவில்லை

வடுவூர் குமார் said...

அதை நீட்டிக்கவும் முடியுமாம்.

Unknown said...

என்ன வோ ஒவ்வொருவருக்கும் கார் ஓட்டிப் பழகும் போது
ஏரோப்பிளேன் ஒட்டப்போறோமொனு ஒரு பயம் இருக்கும் .

டிரைவரு வேற ஸ்டியரிங் வீல பிடிச்சு அப்ப அப்ப ஆட்டுவாரு

ஆனா ஒரு சின்னப்புள்ள ஆல்டோ ஓட்டிட்டு சர்னு போறத
பாத்தா நமக்கு திடீருன்னு நாமல்ல ஒரு பயனா அப்படின்னு
தோணும் .

என்ன பண்ண 'பனக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்ச கூடாதுல்ல'

சரவணகுமரன் said...

//முதலில் நீங்கள் LLR எடுத்துவிட்டுத்தான் கார் ஊட்ட கற்றுக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.//

DHANS, நானும் முதல் நாள் LL போட்டுவிட்டு தான் பழக ஆரம்பித்தேன். முதல் நாள் பதிவில் சொல்ல மறந்து விட்டேன்.

சரவணகுமரன் said...

//மேடான பகுதியில் வண்டியை ஏற்றி பழகும்போது முதலில் handbreak போட்டு நகர்த்தி பழகவும்.//

ஒ! handbreak போட்டுகொண்டு வண்டியை ஓட்டலாமா? ஓட்டகூடாதுன்னுல சொன்னாரு. கொஞ்சம் தூரம் ஓட்டலாமோ என்னவோ?

சரவணகுமரன் said...

//இரவில் ஓடும்போது சதம்மேதுவாக வைத்து மெலடி பாடல்கள் சிறந்தது //

மெலடி பாட்டு கேட்டா டிரைவருக்கு தூக்கம் வருமே? அதனால தான் நான் ஒரே குத்து பாட்ட கேட்பேன்...

சரவணகுமரன் said...

DHANS, உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இதுபோல் நிறைய தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். :-)

சரவணகுமரன் said...

வாங்க karupps. கலகலப்பான பின்னூட்டத்திற்கு நன்றி... :-)

ஆசிரியன் said...

சார் நான் கார் நல்லா ஓட்டுறமாதிரிதான் இருக்கு. ஆனா ரிவர்ஸ் எடுக்கும்போது பின்னாடி சுவர்ல இடிச்சிக்கிட்டேன். கண்ணாடி உடைஞ்சிருச்சு. டிரைவர் பக்கத்தில இருந்தும்.

கார்பென்டர் மூர்த்தி said...

நான் மாருதி 800கார் வாங்கலாம்னு இருக்கேன் .2004மாடல் 1ஓனர் 60000ரூபாய் வாங்கலாமா

கார்பென்டர் மூர்த்தி said...

நான் மாருதி 800கார் வாங்கலாம்னு இருக்கேன் .2004மாடல் 1ஓனர் 60000ரூபாய் வாங்கலாமா

தர்மலிங்கம் said...

மிகவும் பயனுள்ள பதிவு

வரதராஜன் சேலம் said...

Hand brake வண்டி ஓடாமல் நிறுத்த மட்டுமே. வண்டி ஓட handbakeஐ எடுத்து விட்டுத்தான் கார் நகர வேண்டும்.