Wednesday, December 24, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 5

இத்தினி நாளு சின்ன சின்ன ரோட்டுல ஓட்டிட்டு இருந்தேன். இன்னைக்கு மெயின் ரோட்டுக்கு கூட்டுட்டு போனான், நம்ம டிரைவர். (நான் ’போனான்’ன்னு சொன்னாலும், டிரைவர்’ங்கற வார்த்தை மரியாதையா வந்திடுச்சே!) மெயின் ரோட்டுல ஓட்டும்போது அந்த அளவுக்கு ரொம்ப வேல இருந்த மாதிரி இல்ல. திரும்பும்போதுதான் கொஞ்சம் பார்த்து திரும்பணும்.

”இந்த ரோட்டுல திடீர்ன்னு நாயி குறுக்க வந்திருச்சினா என்ன பண்ணுறது?”

பாருங்க. எப்படி எல்லாம் கேள்வி கேட்கறேன்னு. அந்த ரோட்டுல மரணமடைந்து மறைந்த நாயிகள் ஏராளம். எல்லாம் தாரோடு தாராக சேர்ந்து மறைந்து விட்டது. கொஞ்சம் பார்த்து வரலாம். நாயிக்கு என்ன தெரியும்? நாயிக்கு சைடுதான் தெரியும். முன்ன இருக்குறது தெரியாதுன்னு சொல்லுவாங்க. நமக்கு எல்லா பக்கம் தெரிஞ்சுமே, பாட்டு கேட்டுக்கிட்டோ, போன்ல பேசிக்கிட்டோ இடிச்சிக்கிறோம்.

“ஏத்திருங்க”

“ஆங்?” வாயை பிளந்தேன்.

”நான் என்ன சொன்னாலும், உங்க காலு அந்த டைம் ஆட்டோமெடிக்கா பிரேக்குக்கு போயிடும். முன்ன பின்ன பார்த்து பிரேக் போடணும். எல்லாம் உயிருதான். சடன் பிரேக் போடும்போது, பின்னாடி ஏதாவது லாரி வந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க? அதுவும் கவனத்துல இருக்கணும்.”

மூணாவது கியர், நாலாவது கியர் என்று மாத்தி மாத்தி ஓட்டினேன். அப்பப்ப, நிறுத்தி நிறுத்தி ஸ்டார்ட் பண்ணினேன்.

இன்னைக்கு எதுவும் புதுசா கத்துக்கலை. அவ்ளோதானா?

“எனக்கு வளைச்சி திருப்புறது, வண்டிய பொஸிசன் பண்ணுறது எல்லாம் சொல்லி தாப்பா?”

“நாளைக்கு பார்த்துருவோம் சார்”

பேசிட்டே ஓட்டிட்டு இருக்கோம். ஒருவேளை பேசிட்டே ஓட்டுறது எப்படின்னு சொல்லி தாறானோ?

திரும்பும் போது ஸ்பீட் கொஞ்சம் அதிகமாவே இருக்கு.

டெய்லி ஒரு மணி நேரம் டிரைவிங் சொன்னதுக்கு என் பிரண்ட் எனக்கு தெரிஞ்ச இடத்துல ரெண்டு மணி நேரம்ன்னு சொன்னான். பர்ஸ்ட்டு, யாராவது கத்துக்கும் போது பின்னாடி உக்கார்ந்து ஒரு மணி நேரம். அப்புறம் நமக்கு ஓட்ட ஒரு மணி நேரம்ன்னு சொன்னேன்.

நானும் நம்மாளுக்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன், அப்படியெல்லாம் ஓட்ட கூடாதுன்னு சொன்னான். அப்புறம், கத்துக்க வருறவுங்க சிலர் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னான். பிறகு, இன்னொரு காரணமும் இருக்குன்னான்.

“என்ன?”

“போன ரெண்டு உயிர்தானே போகும்?”

அடப்பாவி.

“நீ கத்துக்கொடுக்க போனப்ப, ஏதாச்சும் ஆக்ஸிடண்ட் ஆகிருக்கா?”

”இல்லங்க”

“ம்ம்ம்”

“ஆனா, எங்க மாஸ்டர் பண்ணிருக்காரு.”

“என்னாச்சி?”

“அவரு ஒரு கார ஓட்டும்போது, வீட்டுக்காரர் மேல ஏத்திட்டாரு.”

“அப்புறம்?”

“அவுரு அவுட்”

“என்னது?" எனக்கு தூக்கி வாரி போட்டது.


(தொடரும்)

3 comments:

DHANS said...

நாய் குறுக்க வருதுன்னு நாய் மேல ஏத்திடலாம் என்று நெனைச்சு ஏத்திடாதீங்க..
என் நண்பன் இப்படி பண்ணி அவனுக்கு ஒரு 25000 ரூபாய் செலவு ஆச்சு.

பின்னாடி வண்டி வேகமா வருது, வேற வழி இல்லனா என்ன பண்ண ஏத்திதான் ஆகனும்.அநேகமா நீங்க வண்டி ஓட்ட ரெடி ஆகிறீங்க என்று நெனைக்கறேன்

சரவணகுமரன் said...

//பின்னாடி வண்டி வேகமா வருது, வேற வழி இல்லனா என்ன பண்ண ஏத்திதான் ஆகனும்.//

ஆனா அதுக்கு அவ்ளோ சீக்கிரம் மனசு வராது.

சரவணகுமரன் said...

//அநேகமா நீங்க வண்டி ஓட்ட ரெடி ஆகிறீங்க என்று நெனைக்கறேன்//

எப்படி அப்படி தெரியுது?