Monday, July 27, 2009

வைரமுத்துவின் ’ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’

இது வைரமுத்து 1991இல் எழுதிய நாவல். அவர் வார்த்தையில் இது ஒரு உண்மையும் கற்பனையும் கலந்த காதல் கதை. தேனி வட்டாரத்தைக் களமாக கொண்டு எழுதப்பட்ட அரண்மனை காலத்து கதை. சரியாக எந்த காலம் என்று தெரியவில்லை. வைரமுத்துவின் பலம் - உணர்வுகளை இயற்கை சங்கதிகளோடு அறிவியல் கலந்து எளிமையாக சொல்வது. இந்த நடை, கதையை ஸ்பெஷலாக்கியுள்ளது. கதையை சொல்லி வாசிக்க முடியாமல் ஆக்க கூடாதல்லவா? அதனால் கதையை சொல்ல போவதில்லை. காதலின் லைப் சைக்கிளில் வரும் சேட்டைகள், ஏக்கங்கள், இன்பம், பயம், சோகம் எல்லாவற்றையும் இந்த கதையில் பதிவு செய்துள்ளார். பீலிங் பார்ட்டிகள் கதையை ரசிக்கலாம். மற்றவர்கள் தமிழை ரசிக்கலாம்.

ரசிக்க சில...

---

காதலை இன்னும் இந்த மண்ணில் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. மொழி அதை வெறும் வார்த்தையாய்ப் பார்க்கிறது. விஞ்ஞானம் அதை வெறும் ஹார்மோன்களாய்ப் பார்க்கிறது. மதம் அதை வலக்கையால் தண்டித்துவிட்டு இடக்கையால் ஆசிர்வதிக்கிறது. தத்துவம் அதைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று இன்னும் தீர்மானம் போடவில்லை. இந்தியாவில் காதல் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது காதலர்கள் மீது தான்.

---

பலாப்பழம் உரிப்பது வரை கஷ்டம்.

ரயிலில் ஏறுவதுவரை கஷ்டம்.

முதலிரவில் அணைப்பதுவரை கஷ்டம் - அதாவது விளக்கை.

காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.

---

நிறைவேற்றக் கூடியவர்கள் மட்டுமே காதலிக்கலாம் என்று சட்டமிட முடியுமா?

காய்க்கிற மரங்கள் மட்டுமே பூக்கலாமென்றால் தாவரங்களுக்கு இலையுதிர்காலத்திற்குப் பிறகு இன்னொரு பருவம் இருக்க முடியாது.

---

காற்றை இயங்க வைக்கிறது பூமியின் சுழற்சி.
மரங்களை இயங்க வைக்கிறது காற்றின் சுழற்சி.
மனிதனை இயங்க வைக்கின்றன காதலும் பசியும்.
பசியும் ஒரு வகையான காதல்தான்; காதலும் ஒரு வகையான பசிதான்.

---

குளியலின் முதல் சுகம் குளியல் அல்ல. அது கொடுக்கும் சுதந்திரம்.

ஆடைகள் என்னும் பொய் விலங்குகளைக் களைந்து, விட்டு விடுதலையாகி - நாம் நாமாகவே இருக்கும் வாய்ப்புக்கு மகிழ்ந்து - இதமான வெந்நீர் சருமங்களுக்கு ஒத்தடம் கொடுத்து ஓடி ஒழுகி சொல்லாமல் கொள்ளாமல் அந்தரங்கங்களில் எல்லாம் பரவுகிற போது - வாய் வழியே மூச்சுவிட்டு இமைகள் தாழும் நிமிஷமிருக்கிறதே - அதை, ஒரு மனிதன் வாழும் நிமிஷங்களுள் ஒன்றாய் வரவு வைக்கலாம்.

---

இதைப் படிக்கும்போதே வைரமுத்து வெள்ளை பைஜாமா போட்டுக்கிட்டு விறைப்பா, உங்க கண் முன்னால வருவாரே?

10 comments:

Raju said...

நல்லாருக்கு தலைவா..
முடிஞ்சா படிச்சு பாக்குறேன்.

மகேந்திரன் said...

சரவணா, ஒரு அழகான வரியை மறந்துவிட்டீர்கள்..
அம்சவல்லிக்கு தூக்கம் வராத இரவில், தூங்குவதற்கான முயற்சியாக
விளக்கை அணைப்பாள்.. அப்போது வைரமுத்து சொல்லியிருப்பார்..
"விளக்கை அணைத்தால் வருவதற்கு தூக்கம் என்ன இருட்டா??!!"

நரேஷ் said...

அருமையான அறிமுகம் சரவணகுமரன்.. நீங்கள் சொல்லியுள்ள வரிகளே இதை படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியது என்றால் மகேந்திரன் சொன்ன வரிகள் எல்லாவற்றுக்கும் மேல்...

அருமை (முடிந்தால் அடுத்த வருடம் புத்தக விழாவில் வாங்கிவிட வேண்டியதுதான்...)

சரவணகுமரன் said...

நன்றி டக்ளஸ்

சரவணகுமரன் said...

ஆமாங்க மகேந்திரன்... நல்ல வரி அது. மிஸ் ஆயிடுச்சு...

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்

நாமக்கல் சிபி said...

அருமையான நாவல் இது!

என் ஃபேவரைட் லிஸ்ட்ல

தண்ணீர் தேசம், காவி நிறத்தில் ஒரு காதல், ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - எப்பவும் உண்டு!

சரவணகுமரன் said...

நன்றி நாமக்கல் சிபி

தமிழன்-கறுப்பி... said...

எல்லாவற்றையும் கடந்த பிறகும், இப்பொழுதும் கையிலிருக்கிறது இந்தப்புத்தகம் அது ஒரு பெரிய கதை.

இதைப்பற்றி எப்பொழுதோ ஒரு குறிப்பெழுதியதாக நினைவு.

Rebecca said...

காதலை இன்னும் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை... உண்மையான கருத்து. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே உள்ளது. வாழ்த்துக்கள்