Tuesday, December 8, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 6

வரையும் படங்களுக்கு எனக்கு கலரடிக்க பிடிக்காது. தெரியாது என்றும் சொல்லலாம். கொஞ்சமாவது நல்லா இருக்க வேண்டுமென்றால், அப்படியே விட்டுவிடுவது தான் பெட்டர் என்று விட்டுவிடுவேன்.மனித முகங்களை வரையும்போது, ஸ்கெட்ச் மூலம் கலரடிக்க முடியாது. கலர் பென்சிலோ, வாட்டர் கலர் கொண்டோ வரைய, அது பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதற்கு நான் முயன்றதேயில்லை.

ஆனால், இந்த மாதிரி கார்ட்டூன்களுக்கு ஸ்கெட்ச் மூலம் தாராளமாக கலர் அடிக்கலாம். பாருங்க, கொஞ்சம் காட்டுத்தனமா அடித்திருக்கிறேன்.மிக்கி மௌஸ் பிடிக்காத சிறுவர்கள் உண்டா? எனக்கும் அப்ப ரொம்ப பிடிக்கும். மிக்கி மௌஸ் உருவான கதை தெரியுமா? யூனிவர்சல் ஸ்டூடியோவுக்காக ஆரம்பத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் வால்ட் டிஸ்னி. அவர் அப்போது உருவாக்கிக்கொண்டிருந்த கார்ட்டூன் தொடருக்காக, தயாரிப்பாளர்களிடம் ஊதியத்தை அதிகப்படுத்த சொல்ல, அவர்கள் மறுத்திருக்கிறார். இவரும் கோபத்தில் வெளியே வந்து புது நிறுவனம் தொடங்கிவிட்டார். ஆனால், அவர்களிடம் அவர்கள் ஏற்கனவே உருவாக்கியிருந்த கார்ட்டூன் கேரக்டருக்கான உரிமை இல்லாததால், புதிய கேரக்டர் உருவாக்க வேண்டியிருந்தது.என்ன பண்ணலாம் என்று ஒவ்வொரு மிருகமாக வைத்து யோசிக்க, கடைசியில் டிஸ்னியை கவர்ந்தது, அவர் தோட்டத்து எலிக்குட்டி. அதை வைத்து ஒரு கேரக்டர் செய்துவிட்டார்கள். அந்நேரத்தில் டிஸ்னியுடன் பணியாற்றிய நடிகர் மிக்கி ரூனியின் பெயர்தான், மிக்கி மௌஸ் என்ற பெயர் அமைய காரணம் என்று சொல்கிறார்கள்.

உருவமும் பெயரும் போதுமா? அதன் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? அதன் செய்கைகளுக்கு இன்ஸ்பிரெஷனாக டிஸ்னி எடுத்துக்கொண்டது சார்லி சாப்ளினை.ஆனால், மற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை டிவியில் அடிக்கடி பார்ப்பது போல, டிஸ்னியின் கேரக்டர்களை பார்த்துவிட முடியாது. அதற்கு காரணம், அதன் மேல் உள்ள காப்பிரைட் உரிமைகள். இதில் இவ்வளவு கவனமாக இருந்ததற்கு காரணம், முதலில் ஏமாந்தது போல் திரும்பவும் ஏமாந்துவிட கூடாது என்பதுதான்.இப்ப, டிஸ்னிக்கென்றே பிரத்தியேக சேனல் இருக்கிறது. அடிக்கடி பார்த்துக்கொள்ளலாம். ஓவியமாக கவர்ந்த அளவுக்கு, கார்ட்டூன் கதைகளாக எனக்கு அவ்வளவு பிடிக்காது. எல்லோரையும் போல், டாம் அண்ட் ஜெர்ரி பிடிக்கும். கவுண்டமணி செந்தில் கான்செப்ட். அப்புறம், பாப்பாய் பிடிக்கும். ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று எளிமையா சின்ன சினிமாக்கதை போல் இருக்கும்.சமீபத்தில் டோரா அடைந்த பிரபலம் ஆச்சரியப்படுத்துகிறது. மடமடவென எல்லா பொருட்களிலும், டோரா இருக்கிறாள். எங்கும் டோரா. எதிலும் டோரா. இவள் நிக்கெலோடென் வீட்டு பெண்.தமிழ்ப்பட பாடல் வரை கொண்டு வந்துவிட்டார்கள். குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கூட, டோரா பர்த்டே பார்ட்டி என்று ஒரு தீமுடன் கொண்டாடுகிறார்கள்.குழந்தைகளின் தோழமையான ஹீரோக்கள் - கார்ட்டூன்கள். அதனால் தான் எத்தனை வருடங்கள் கழித்தும், ஒரு மவுஸுக்கு கூட இவ்வளவு மவுசு.

---

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் மகேந்திரனுக்கு இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

.

6 comments:

மகேந்திரன் said...

நன்றி சரவணா..

sathishsangkavi.blogspot.com said...

இந்த படங்கள் எல்லாம் நீங்க வரைஞ்சதா.........?

Anonymous said...

Mahendran Hearty Birthday wishes

கிரி said...

படங்கள் அருமை :-)

சரவணகுமரன் said...

Sangkavi,

என்ன இது? இப்படி ஒரு கேள்வி கேட்டு என்னை அசிங்கப்படுத்திட்டீங்க? :-)

சரவணகுமரன் said...

நன்றி கிரி