Tuesday, December 22, 2009

2009 - ரசித்த பாடல்கள்

இது நான் இந்த வருடம் கேட்டு ரசித்த பாடல்களின் லிஸ்ட். பெரும்பாலான படங்களின் பாடல்களை படம் வருவதற்கு முன்பே கேட்பது வழக்கம். அப்படி கேட்காமல், படம் பார்த்தபிறகு கேட்டதும் உண்டு. வர வர, அப்படிப்பட்டது குறைந்துக்கொண்டே வருகிறது.

இந்த லிஸ்ட்டில், தாலாட்டி தூங்க வைக்கும் பாடல்களும் உண்டு. தூக்கத்தை கலைத்து, சுறுசுறுப்பாக வேலை பார்க்க வைக்கும் பாடல்களும் உண்டு.

சில படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் பிடித்திருந்தாலும், லிஸ்ட் நீளக்கூடாது என்பதால், அதிகம் பிடித்த ஒரு பாடலை மட்டும் குறிப்பிட்டுயிருக்கிறேன். அதேப்போல், ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களின் பாடல்கள் பிடித்திருந்தாலும், ஒரு படத்தை மட்டும் குறிப்பிட்டுயிருக்கிறேன்.மாசிலாமணி - ஓ திவ்யா திவ்யா - இமான்

என்ன, ஆரம்பமே ஏடாகூடமா இருக்கிறதா? அப்படித்தான். ஏன்னா, இமானுக்காக. இந்த படத்தில் இதுவும், ‘டோரா டோரா’வும் ஒரே அளவில் நான் ரசித்த பாடல்கள்.

பொக்கிஷம் - நிலா நீ வானம் - சபேஷ் முரளி

படத்தில் நிறைய பாடல்கள். எல்லாம் சூப்பர் என்று சொல்லமுடியாது. ஆனால், இந்த பாடல் என்னை ரொம்ப கவர்ந்தது. டிவியில் பார்த்தபோது, படமாக்கமும் நன்றாகத்தான் இருந்தது. நடுவில், சின்மயி பாடும் ‘அன்புள்ள மன்னா’ என்ற வரிகள் அருமையாக இருக்கும்.

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் - கடலோரம் - யுவன் ஷங்கர் ராஜா

இந்த பாடலை யுவன் பாடியிருந்தாலும், எனக்கு பிடித்தது எஸ்.பி.பி.சரண் பாடியது. பாடலை கேட்க துவங்கும்போதே, காதல் உணர்வு நம்மை சுற்றி பரவ தொடங்கிவிடும். ‘சின்ன சிறுக மனசுக்குள்’ பாடலும் மென்மையான மனதை வருடும் பாடல். கடைசியில், படத்தின் ரிசல்ட்டிற்கு உதவவில்லை.

வில்லு - டாடி மம்மி - தேவி ஸ்ரீ பிரசாத்

துள்ளலான இசை. ஆட்டம் போட வைக்கும் பாடல்கள். தேவி ஸ்ரீ பிரசாத், இந்த வருடம் மாங்கு மாங்கு என்று இரண்டு படங்களுக்கு உழைத்திருந்தார். இதுவொன்று. கந்தசாமி இன்னொன்று. பாடல்கள் ஹிட்டாகியும், படம் கைக்கொடுக்கவில்லை.

நாடோடிகள் - சம்போ சிவ சம்போ - சுந்தர் சி பாபு

படத்தின் முக்கியமான காட்சிக்கு, ஒரு பாடலை வைத்து பரபரப்பையும், விறுவிறுப்பையும் கூட்ட வேண்டுமென்றால், அந்த பாடல் எப்படி இருக்க வேண்டும். ஷங்கர் மகாதேவனின் குரலில் இந்த பாடலை கேட்டுக்கொள்ளுங்கள். படம் பார்க்கும் முன்பு, இந்த பாடலை கேட்டதில்லை. இருந்தாலும் பார்க்கும்போதும், புதிதாக தெரியவில்லை. பிறகு, இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

அயன் - நெஞ்சே நெஞ்சே - ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜிடன் விசேஷம், படம் முழுக்க ஹிட் சாங்ஸ் கொடுத்து விடுவார். குறைந்தபட்சம், தற்காலிகமாகவாவது. இந்த படத்திலும், விழி மூடி யோசித்தால், ஓயாயி ஏயாயி ஏயாயி என டிஜிட்டல் இசைக்காக பிடித்தவை இவை. ஆதவன் - வாராயோ வாராயோ, ஹசிலி பிடித்திருந்தாலும், பிரதிநிதித்துவம் காரணமாக லிஸ்ட்டில் சேர்க்கவில்லை. :-)

நான் கடவுள் - பிச்சைப்பாத்திரம் - இளையராஜா

இசைஞானிக்கு இந்த வருடம் சொல்லும்படியான படம். ரமணருக்கு இளையராஜா எழுதிய பாடலை, இந்த படத்திற்கு பயன்படுத்தியிருந்தார்கள். பாடலுடன் சேர்த்து, படத்தின் விஷுவலும் கலங்க வைக்கும்.

அச்சமுண்டு அச்சமுண்டு - கண்ணில் தாகம் தீருமோ - கார்த்திக் ராஜா

ரொம்ப பிரபலமாகாத பாடல். ஆனால், கேட்கும்போது கண்டிப்பாக என்னவோ செய்யும். நல்ல பாடல் கொடுத்தும், கார்த்திக் ராஜாவிற்கு பெட் லக் தொடர்கிறது.

நினைத்தாலே இனிக்கும் - அழகாய் பூக்குதே - விஜய் ஆண்டனி

பாடலும் சரி, படமாக்கமும் சரி, சிறப்பாக வந்த பாடல். கேட்பதற்கு சுகமான பாடல். படம் வெளிவந்து, ரொம்ப நாட்கள் கழித்து தான், இந்த பாடலை சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள். எதற்கென்று தெரியவில்லை. படத்தின் சஸ்பென்ஸ் போய்விடக்கூடாதென்றா? வேட்டைக்காரனின் ‘கரிகாலன்’ பாடலும், விஜய் ஆண்டனி இசையமைத்ததில் இந்த வருடம் எனக்கு பிடித்த பாடல்.

பசங்க - அன்பாலே அழகான வீடு - ஜேம்ஸ் வசந்தன்

படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே இதுவும், ‘ஒரு வெட்கம் வருதே’ பாடலும் பிடித்தது. படம் பார்த்தபிறகு, இவ்விரு பாடல்களை கேட்பது இன்னமும் கூடியது. பாலமுரளிகிருஷ்ணா குரலில் ‘அன்பாலே’ கேட்கும்போதெல்லாம், ரொம்ப நிறைவா, மனதுக்கு இதமாக இருக்கும்.

---

நான் ரசித்த பாடல்கள் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் லிஸ்ட்டுனா, பத்து இருந்தா தானே நல்லா இருக்கும்.

இந்த வருடம், யுவன் இசையமைப்பில் சர்வம், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், வாமனன் (ஏதோ செய்கிறாய்), யோகி என பல படங்களின் பாடல்கள் ஹிட்டாகியிருந்தாலும், எஸ்.எம்.எஸ் தவிர படம் எதுவும் ஹிட்டாகவில்லை.

வித்யாசாகர் நிலை வேறுமாதிரியானது. பேராண்மை படம் நல்ல பெயரை பெற்றாலும், பாடல்கள் ஹிட்டாகவில்லை. ‘துப்பாக்கி பெண்ணே’ மட்டும் எனக்கு பிடித்தது. கண்டேன் காதலை, சன் தயவில் ஓடினாலும், பாடல்கள் பிரபலமாக கேட்டாலும், ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாது. ‘சுத்துது சுத்துது’ மட்டும் கொஞ்ச நாட்கள் கேட்டு கொண்டிருந்தேன்.

விஜய் ஆண்டனிக்கு நல்ல வருஷம் என்று சொல்லவேண்டும். நிறைய படங்கள் இசையமைத்து இருந்ததில், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன் பாடல்கள் சூப்பர் ஹிட்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த ஆனந்த தாண்டவத்தில் ’கல்லில் ஆடும் தீவே’, ’பூவினை திறந்து கொண்டு’ இரண்டு பாடலும் நன்றாக இருந்தது. படம் சரியாக போகவில்லையென்றாலும், அவருக்கு இது முக்கியமான ஆண்டு. அவர் இசையமைப்பில் எதிர்பார்ப்பிற்குரிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ பாடல்கள் வெளியானது.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த வருடம் என்ற ஸ்பெஷல் இருந்தாலும், அவர் இசையமைப்பில் எந்த தமிழ்ப்படமும் இந்த வருடம் வெளியாகவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயம்.

தவிர புது இசையமைப்பாளர்கள், தமன், ஸ்ருதி ஹாசன், கணேஷ் ராகவேந்திரா போன்றோரும் குறிப்பிடத்தக்க வகையில் இசையமைத்திருந்தனர். அடுத்த வருடம், இன்னமும் பெயர் சொல்லும்படி இசையமைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வருடம் பாடல் வெளியாகி, அடுத்த வருடம் வெளியாகும் படங்களில் கவனிப்பவை - ஆயிரத்தில் ஒருவன், விண்ணைத்தாண்டி வருவாயா, பையா, அங்காடி தெரு, லீலை, நாணயம் (நான் போகிறேன் - ஒரு பாடலுக்காக)

சொன்ன பாடல்கள் சில, இங்கு கேட்கலாம்..

17 comments:

sathishsangkavi.blogspot.com said...

நண்பரே குத்துப்பாட்டு எதும் இல்லையா?

angel said...

nala irukunga

சரவணகுமரன் said...

Sangkavi,

வில்லு, வேட்டைக்காரன், கந்தசாமி பத்திலாம் சொல்லியிருக்கேனே?

சரவணகுமரன் said...

நன்றி ஏஞ்சல்

Azhar said...

இளைய ராஜா பற்றி சொல்லவே இல்லையே?

கலையரசன் said...

75% என்னோட ரசனையும் ஒத்துபோகுது தல...
பொருமையா டைப் அடிச்ச உங்களுக்கு ஓஓஓஓஓஓஓ!!!!

Karthick said...

achamundu achamundu - carnatic singer Sowmya..voice...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாணயம் (நான் போகிறேன்)- My favorite song

முனைவர் இரா.குணசீலன் said...

இசைஞானிக்கு இந்த வருடம் சொல்லும்படியான படம். ரமணருக்கு இளையராஜா எழுதிய பாடலை, இந்த படத்திற்கு பயன்படுத்தியிருந்தார்கள். பாடலுடன் சேர்த்து, படத்தின் விஷுவலும் கலங்க வைக்கும்.//

உண்மைதான் நண்பரே எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

“அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்..?“

ஒவ்வொரு பாடலடிகளும் நன்றாக இருக்கும்..

சரவணகுமரன் said...

அசார், நான் கடவுளில் சொல்லியிருக்கேனே? தவிர, வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

சரவணகுமரன் said...

நன்றி கலையரசன்...

சரவணகுமரன் said...

அந்த 25% எது கலையரசன்?

சரவணகுமரன் said...

ஆமாம் கார்த்திக், சௌமியா குரல்... தமிழை கொஞ்சம் பஞ்சர் செய்திருப்பார்...

சரவணகுமரன் said...

ரமேஷ், எனக்கும்

சரவணகுமரன் said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன் சார்...

கௌரி said...

ஈரம் மற்றும் வெண்ணிலா கபடி குழு சிறந்த முயற்சிகள்

சரவணகுமரன் said...

நன்றி கௌரி