Tuesday, December 30, 2008

ஹிந்தி கஜினி - தமிழுடன் ஒரு ஒப்பீடு

இந்த படத்தை ஹிந்தி கலைஞர்கள், தமிழ் கலைஞர்கள் என்று ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஹிந்தியிலும் முக்கியமான தொழிநுட்ப கலைஞர்கள் எல்லாம் தமிழர்கள் தான். முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், ரவி கே. சந்திரன், எடிட்டர் ஆண்டனி, பீட்டர் ஹெயின், ஸ்டன் சிவா என்று முக்கிய துறைகள் அனைத்தும் நம்மவர்கள். நடிகர்களிலும் அசின் இருக்கிறார். ரியாஸ்கான் இருக்கிறார். அதே பெங்களூர் ஐ.டி.பி.எல் இருக்குது.

இந்த படத்தின் பலமே, வேகமான திரைக்கதையும், அசினுடனான காதல் எபிசோடும். முடியும் சமயம் பெண்கள் ஆதரவு கருத்தும் சேர்ந்து வருவதால், நல்ல படம் பார்த்த எபெக்ட் இந்த மசாலா படத்திற்கும் வரும். இது எதற்கும் ஹிந்தியிலும் எந்த பாதிப்பும் இல்லை. ரிச்னெஸ் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

அமீர், குறை ஒண்ணும் சொல்ல முடியாது. என்ன, சிக்ஸோ, எய்ட்டோ அத்தனை பேக் பண்ணி ஒல்லியா இருக்காரு. கண்ணாடியில தன் உடலை பார்த்து உறுமுற காட்சி - டெரர். அவரோட டபுள் மடங்கு இருக்குற குண்டர்கள தூக்கி போடுறது நம்பகதன்மையா இல்லை. இந்த மாதிரி குண்டர்கள, இந்த ஹிந்தி படத்தில தான் நான் பார்த்திருக்கிறேன்.

அசின் அறிமுகமாகுற பாட்டுல ஏனோ அந்தளவுக்கு இல்லை. அப்புறம், அவுங்க ஆவர்த்தனம் பண்ற காட்சில வழக்கம் போல கலக்கிடுறாங்க.

நயன்தாராவுக்கு பதிலா ஜியா கான். தமிழ்லையும் நயன்தாரா பெருசா ஏதும் பண்ணல. முக்கியமா மில்லுல ஓடுற சீன் இல்ல. இருந்தாலும், நயன்தாரா......

தமிழ்'ல விமர்சகர்கள் சொன்ன குறை, கிளைமாக்ஸ். அதனால், அதை முருகதாஸ் இதில் மாற்றி இருக்கிறார். ஹிட்டான படத்தில மாற்றங்கள் செய்ய கட்ஸ் வேணும். முருகதாஸ் துணிந்து செய்திருக்கிறார். சார்ட் டெர்ம் மெமரி லாஸ், மாறி மாறி வரும் பிளாஸ்பேக், பழி வாங்கல் இப்படி எக்ஸ்ப்ரெஸ் மாதிரியான படத்தில், கிளைமாக்சில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி இல்லாவிட்டால், ஏமாற்றமாக தான் இருக்கும். இந்த கிளைமாக்சும் எனக்கு பிடிக்கவில்லை. இதற்கு தமிழ் பெட்டர் என்று தோன்றியது. தியேட்டரில் சிலர் சிரித்து விட்டார்கள். இறுதி முடிவு, கொஞ்சம் 7 ஜி மாதிரி தான் இருந்தது.

இசை ஏ.ஆர். ரஹ்மான் என்றதும் ரொம்பவே எதிர்பார்த்தேன். தமிழ் ரசிகர்களுக்கு ஹிந்தி பாடல்கள், தமிழ் அளவுக்கு பிடித்திருக்காது. ஆனால், ஹிந்தியில் நல்ல ஹிட். பின்னணி இசையில் ஹாரிஸ், மொட்டை சூர்யா, அசின், வில்லன் என்று ஒவ்வொருவருக்கு ஒரு தீம் வைத்திருந்தார். எல்லாமே சூப்பரா இருக்கும். அதுவும் அந்த "ஸோ....... ஸோ.. ஸோ..", கலக்கலா இருக்கும். இதில் வில்லனுக்கு வைத்திருந்த தீமே என்னை ரொம்பவும் கவர்ந்தது. நம்ம தலைக்கு மேல இருந்து வருற மாதிரியான டிஜிட்டல் இசை, அபாரம். அப்பப்ப, மேல பார்த்திக்கிட்டேன். அப்புறம், காரை வித்து அசின் கொடுக்குற பணத்தை கையில வச்சிகிட்டு அமீர் லண்டன் போறப்ப, ஒரு பாட்டு வைச்சிருக்காங்க. ரங்கோலாவுக்கு பதில், இது ஒரு நல்ல மாற்றம்.

ஹிந்தி ரசிகர்கள் சொல்ற குறை, ஓவர் வன்முறை. இது, தமிழுலும் இருந்தது. ஆனா நாம, பருத்திவீரன், சுப்ரமணியபுரம்ன்னு கடந்து வருரதால பெருசா தெரியல. அதே சமயம், இதுல சும்மா சும்மா அந்த இரும்பு கம்பியை காட்டி பயமுறுத்துறாங்க. அடிக்குற அடில, என் தலையும் சும்மா கிண்னேனு வலிச்சிது.

போட்ட பட்ஜட்டோட முருகதாஸ் கம்மியா முடிச்சிட்டாராம். பூஜை போட்டவுடனே, படம் நல்லலலலல ரேட்டுக்கு வித்துடுச்சாம். அதனால முருகதாசுக்கு அங்க நல்ல பேராம். அதோட படத்தோட ஹைப்பும் அதிகம். இந்திய அளவுல ஒப்பனிங்கும் பெருசு. ஒரு தமிழ் டீமோட படம்ங்றதால பெருமைப்பட்டுக்கலாம்.

11 comments:

Jackiesekar said...

உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்

Jackiesekar said...

உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்

மே. இசக்கிமுத்து said...

புதிய முயற்சிகளில் இறங்குவதில் தமிழன் தில் உள்ளவன் தான்!!
தமிழ் கஜினி தான் தூள்!

சரவணகுமரன் said...

நன்றி ஜாக்கி சேகர்

சரவணகுமரன் said...

வாங்க இசக்கிமுத்து. வருகைக்கு நன்றி...

கிரி said...

////போட்ட பட்ஜட்டோட முருகதாஸ் கம்மியா முடிச்சிட்டாராம். பூஜை போட்டவுடனே, படம் நல்லலலலல ரேட்டுக்கு வித்துடுச்சாம். அதனால முருகதாசுக்கு அங்க நல்ல பேராம். அதோட படத்தோட ஹைப்பும் அதிகம். இந்திய அளவுல ஒப்பனிங்கும் பெருசு. ஒரு தமிழ் டீமோட படம்ங்றதால பெருமைப்பட்டுக்கலாம்//

சூப்பர்..

நான் கஜினி ஹிந்தி பார்த்துட்டு உங்க விமர்சனம் படிக்கிறேன் :-)

சரவணகுமரன் said...

வாங்க கிரி... பார்த்திட்டே படிங்க... உங்க கருத்தையும் பதிவா போடுங்க...

SurveySan said...

super.

சரவணகுமரன் said...

நன்றி சர்வேசன்

Anonymous said...

I ALSO AGREE WITH UR COMPARISIONS ABOUT HINDI AND TAMIL GAJINI,

INFACT AAMIRKHAN DID HIS BEST IN HINDI GHAJINI WHERE AS WE CANT COMPARE WITH THAT TOO WITH TAMIL SURYA.

IF U SEEN BOTH THE MOVIES U WILL LAUGH AT HINDI GHAJINI, YES U R RIGHT , I ALSO LAUGHED AT THE HINDI CLIMAX

BY THE WAY I DONT KNOW HOW TO INPUT IN TAMIL LANGUAGE HENCE I AM WRITING IN ENGLISH.

I HAVE COME HERE BY READING UR BLOG ADDRESS IN ANANDA VIKATAN

U R DOING GOOD, BEST WISHES

SARAN.J

சரவணகுமரன் said...

Thanks Saran...

நீங்கள் E-Kalappai, NHM Writer போன்ற மென்பொருட்கள் மூலம் தமிழில் டைப் செய்யலாம். இல்லாவிட்டால், இந்த பக்கம் மூலமாகவும் தமிழில் டைப் செய்யலாம். http://www.google.com/transliterate/indic/tamil