Monday, December 15, 2008

மென்பொருள் நிறுவனத்தில் அரசியல்வாதிகள்

'அரசியல்வாதிகள் மென்பொருள் நிபுணரானால்' அப்படின்னுதான் தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன். ச்சின்னப்பையன் கூட காப்பிரைட் பிரச்சனை வரும்னு தவிர்த்திட்டேன். இருக்குற மென்பொருள் ஆளுங்களுக்கே எப்ப ஆப்புன்னு தெரியாம இருக்கும் போது, அவுங்க எப்படி வருவாங்கன்னு லாஜிக் பேச கூடாது. அரசியலும் ஒரு வேலைன்னு இருக்குறவுங்களுக்கு, எந்த வேலையா இருந்தா என்ன?


மேனேஜ்மெண்ட்

கம்பெனியின் மொத்த நிர்வாகத்தையும் தமிழின தலைவர் கிட்ட கொடுத்திடணும். அப்பத்தான், கம்பெனி நல்லா வளரும். பல இடங்களில் பிராஞ்ச் ஆரம்பிக்குறதுல எக்ஸ்பெர்ட். இவர்கிட்ட, யாராச்சும் சிபாரிசில் வேலை கேட்டு சென்றால், "என் இதயத்தில் ஏராளமாக இடம் கொடுத்திருக்கும் உனக்கு எதற்கெடா கண்மணி இந்த மூணுக்கு நாலு அடி இடத்தின் மீது ஆசை?" அப்படின்னு கேட்டு எஸ்கேப் ஆகிடுவாரு. அடுத்த எம்.பி. யாருன்னு போர்டு மீட்டிங்ல தான் முடிவு பண்ணுவோம்னு சொன்னாலும், அது யாருன்னு ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும்.

மனிதவள மேலாளர் (ஹுமன் ரிசோர்ஸ்)

மேனேஜ்மெண்ட்க்கு ஒரு நல்ல அனுபவஸ்தர் இருக்காரு. இந்த இடத்துக்கு பொருத்தமான ஆளு, தலைவிதான். ஊழியர்கள சேர்க்கும் போது, ரொம்ப கனிவா பேசுவாங்க. சேர்ந்ததுக்கு அப்புறம் இவுங்கள பார்க்கவே முடியாது. எப்பவாச்சும் ஏதாச்சும் அவுங்களுக்கு தேவைன்னா வருவாங்க. அப்புறம், ஒவ்வொரு அப்ரைசல் மீட்டிங் அப்ப மட்டும் வருவாங்க. மத்த நேரம் எல்லாம், ரெஸ்ட் எடுக்க எங்காச்சும் போய்டுவாங்க. அதுக்காக எப்பவும் அப்படின்னு சொல்ல முடியாது. திடீர்ன்னு மேனேஜ்மெண்ட் கிட்ட போயி, கேண்டீன்'ல தண்ணி வரலைன்னு கம்ப்ளைன் பண்ணுவாங்க. துறையில் தேக்கநிலை ஏற்படும்போது, இவுங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்'ஆ இருப்பாங்க. ஒரே நாள்லே எத்தினி பேர வேணா கம்பெனியில இருந்து தூக்கிடுவாங்க.

டெவலப்பர்

இதுக்கு கொஞ்சம் நல்லா திங்க் பண்ணனும். சுப்பிரமணிய சுவாமின்னு ஒருத்தர் இருக்காரு. நல்லா யோசிப்பாரு. பட், ரிசல்ட் ஒழுங்கா வராது. கல்குலேசன் லாஜிக் ரொம்ப இருந்திச்சின்னா, சிதம்பரம்ன்னு ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட கொடுத்திடலாம். என்ன பிரச்சனைனா, எங்க ஊர்லதான் இந்த சாப்ட்வேர முதல்ல இன்ஸ்டால் பண்ணனும்னு சொல்லுவாரு. உண்மையிலே இந்த வேலையில இருக்குறவுங்க நேரம் காலம் தெரியாம வேல பார்க்கணும். இதுக்கு அரசியல்வாதிகள் எல்லாம் லாயக்கில்லை. தொண்டர்கள் தான் சரி. எலக்சன், பொதுக்கூட்டம் போது பிரியாணி கொடுக்குற மாதிரி, ப்ராஜெக்ட் டெட்லைன் அப்ப, பீட்சா வாங்கி கொடுத்தா, வீடு உறவெல்லாம் மறந்து வேல பார்ப்பாங்க.

டெஸ்ட்டர்

டெவலப்பர் பண்றதுல எல்லாம் குத்தம் கண்டு பிடிக்குற மாதிரி ஆள் தேவை. அதே சமயம், குத்தம் இல்லாத மாதிரி பண்றதுக்கான திறமையும் தேவை இல்லை. இந்த வேலைக்கு அப்படி ஒரு ஆள் தேவை. கேப்டன்னு சொல்லிட்டு ஒரு ஆள் இருக்காரு. அவருதான் இதுக்கு சரி. அப்படி என்ன வேல பாப்பாரோ தெரியல, எப்பவும் கண்ணு ரெண்டும் செவப்பா இருக்கும். சில சமயம், சாப்ட்வேர் ஒழுங்க ஓடும்போது, இதுக்கு ஐடியா நான்தான் கொடுத்தேன் சொல்லுவாரு பாருங்க, அதுல்லாம் கொஞ்சம் ஓவர் தான். தவிர, பத்திரிகையாளர்கள் சிலர் இருக்காங்க. சோ, ஞாநிங்கற பேரு வச்சிட்டு விமர்சனம் பண்ணுறேன்னு அதிகமா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க. அவுங்களையும் யூஸ் பண்ணிக்கலாம்.

மார்க்கெட்டிங் / சேல்ஸ்

மாறன் பிரதர்ஸ்னு அண்ணன் தம்பி ரெண்டு பேரு இருக்காங்க. இந்த துறைக்கு அவுங்களைவிட பொருத்தமா யாரும் கிடைக்கமாட்டாங்க. தம்பிக்காரரு நல்லா ப்ராஜெக்ட் பிடிச்சிட்டு வருவாரு. பில் கேட்ஸ் வரை தொடர்பு இருக்கு. மார்க்கெட்டிங் துறைக்கே மிகவும் அவசியமான விளம்பரத்தின் மீது ரொம்ப ஆர்வம் இவருக்கு. எந்த கிளையண்ட மீட் பண்ணினாலும் சிரிச்ச முகத்தோட ஒரு போட்டோ எடுத்துக்குவாரு. ப்ராஜெக்ட் பிடிக்குறதுல இவர் கில்லாடின்னா, பண்ணுன பிராடக்ட விக்குறதுல இவரு அண்ணன் ஜெகதால கில்லாடி. எவ்ளோ மோசமான பிராடக்டா இருந்தாலும், பஞ்சர் பாத்து, டிங்கரிங் செஞ்சு எப்படியோ விளம்பரம் பண்ணி வித்துட்டு வந்திடுவாரு.

பெஞ்ச் ரிசோர்ஸ்

இவுங்களால கம்பெனிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனா, ஏதோ கம்பெனியே இவுங்கலாலதான் ஓடிட்டு இருக்குற மாதிரி அங்கயும் இங்கயும் போயிட்டு இருப்பாங்க. ஓவரா பேசிட்டு வேற இருப்பாங்க. எப்பவாவது புது ப்ராஜெக்ட்'க்குகோ, இல்ல ஓடிட்டு இருக்குற பழைய ப்ராஜெக்ட் டெட்லைன் அப்ப தேவைப்படுவாங்க. இவுங்கக்கிட்ட ஒரு நல்ல பழக்கம் என்னன்னா, எந்த டீம்'ல போட்டாலும் வேல பார்ப்பாங்க. ஏதோ தாங்கள் தான் தங்களுக்கான டீம செலக்ட் பண்ற மாதிரி காட்டிகிட்டாலும், உண்மை அது இல்லைன்னு அவுங்களுக்கே தெரியும். யாருன்னு தெரியும்'ல, தோழரே?

ஜனநாயகம்'ங்கற பேர்ல கம்பெனி நடத்திட்டு இருக்குற இவுங்களுக்குத்தான், கம்பெனியோட பெருமளவு லாபம் போயி சேருரத, நாம எப்படி அநியாயம்னு சொல்ல முடியும்?

13 comments:

ஆதித்தன் said...

இப்பிடி ஒரு பதிவை, இப்பிடி எல்லாம் யோசிச்சு போட்ட நீங்கள்தான் அரசியல்வாதி ஆகி இருக்கவேண்டும்.
என்ன செய்ய? நாட்டுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

Anonymous said...

எப்படிப்பா இவ்வளவு பொருத்தமா எல்லத்தையும் தேடிப் பிடிச்சுப் போட்ட?

ஆனாலும், அகில உலக பாடி பில்டர் சரத் குமாரையும், அகில் உலக் கோமாளி கார்த்திக்கையும் கண்டுக்காம விட்டது என்ன உள்நோக்கம்?

சரவணகுமரன் said...

நன்றி ஆதித்தன் :-)

சரவணகுமரன் said...

நன்றி வடகரை வேலன்

//ஆனாலும், அகில உலக பாடி பில்டர் சரத் குமாரையும், அகில் உலக் கோமாளி கார்த்திக்கையும் கண்டுக்காம விட்டது என்ன உள்நோக்கம்?//

அவர்கள் திறமைக்கு கம்பெனியில் எந்த இடமும் இல்லை. :-)

முரளிகண்ணன் said...

அசத்தல்

சின்னப் பையன் said...

ஆஹா... இதை இப்பத்தான் பாத்தேன்....

சின்னப் பையன் said...

அசத்திட்டீங்க... அமர்க்களமா இருக்கு... சரியா பிடிச்சிருக்கீங்க ஆட்கள... ஏதாவது கம்பெனி ஆரம்பிக்கப் போறீங்களா????

சின்னப் பையன் said...

கோடிங், டெஸ்டிங், ரிப்போர்டிங், மீட்டிங், கட்டிங், வெட்டிங் இப்படி எல்லா வேலையையும் செய்ய ஒரு அஷ்டாவதானி இருக்காரு. வேணுங்களா???

சரவணகுமரன் said...

//ஆஹா... இதை இப்பத்தான் பாத்தேன்....//

ஒ! அப்படியா...

சரவணகுமரன் said...

நன்றி ச்சின்னப்பையன்

சரவணகுமரன் said...

//கோடிங், டெஸ்டிங், ரிப்போர்டிங், மீட்டிங், கட்டிங், வெட்டிங் இப்படி எல்லா வேலையையும் செய்ய ஒரு அஷ்டாவதானி இருக்காரு. வேணுங்களா???//

தெரிஞ்சி போச்சி... :-)

என்ன ஒரு ப்ரோப்ளம், அப்ளிகேசன் சரியா ஒர்க் ஆகாட்டியும் பரவாயில்லை. எதுகை மோனையோடதான் முடிப்பேன்னு சொல்லுவாரு.

"எ பிளஸ் பி இஸ் ஈகுவல் டு சி
நான் பண்ற ப்ரோகாமும் சி
சிம்புவோட மொத எழுத்தும் சி
ஜெயிக்க போறது என் கட்சி
ஆழாதம்மா தங்கச்சி
வாங்கி தாரேம்மா வாழைக்காய் பஜ்ஜி
ஏய்! டங்க டக்கா...
ஏய்! டனுக்க டக்கா...."

லிங்காபுரம் சிவா said...

//டெவலப்பர்: தொண்டர்கள் தான் சரி. எலக்சன், பொதுக்கூட்டம் போது பிரியாணி கொடுக்குற மாதிரி, ப்ராஜெக்ட் டெட்லைன் அப்ப, பீட்சா வாங்கி கொடுத்தா, வீடு உறவெல்லாம் மறந்து வேல பார்ப்பாங்க.//
முற்றிலும் உண்மை...

//மார்க்கெட்டிங் / சேல்ஸ்: எவ்ளோ மோசமான பிராடக்டா இருந்தாலும், பஞ்சர் பாத்து, டிங்கரிங் செஞ்சு எப்படியோ விளம்பரம் பண்ணி வித்துட்டு வந்திடுவாரு//
ஹ‌ ஹ ஹ ஹ ஹ..... கரெக்ட் செலக்சன்.

//பெஞ்ச் ரிசோர்ஸ்: ஏதோ தாங்கள் தான் தங்களுக்கான டீம செலக்ட் பண்ற மாதிரி காட்டிகிட்டாலும், உண்மை அது இல்லைன்னு அவுங்களுக்கே தெரியும். யாருன்னு தெரியும்'ல, தோழரே? //

ஹி ஹி ஹி... அவுக அப்படித்தான் தோழரே...

Nice post... Keep Rocking..

சரவணகுமரன் said...

நன்றி பழையபேட்டை சிவா