Tuesday, June 9, 2009

முதல்வர் விஜய்

ஜூன் 22 ஆம் தேதி நடக்க போறதா சொல்லி வருற நியூஸை பார்க்கும்போதெல்லாம் ரொம்ப பயமா இருக்கு. தினசரி காலண்டரை எடுத்து பார்க்குறேன். அன்னிக்கு ஏதாச்சும் விசேஷம்ன்னு போட்டு இருக்கான்னு. நல்ல வேளை, அப்படி ஏதும் இல்லை. இதையே நினைச்சு நினைச்சு, தூக்கத்துல கூட இது தான் கனவுல வருது. என்ன வருதா?

எஸ்.ஜே.சூர்யா பாணியில் வாசிக்கவும்.

கனவுல என்ன நடக்குது? அதான் இந்த பதிவு. வாங்க. லெட் அஸ் வாட்ச் த ட்ரீம்....

----



வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016. எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல் பிரஸ் மீட்.

“சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?”

“தம்பி, நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல, சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?”

“என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?”

எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?”

அந்த நிருபர் மறைகிறார்.

இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?”

“இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.”

“சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?”

“ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.”

“அது எப்படி?”

“என்னோட முத மாச சம்பள பணத்தை (ஒரு ரூபா) இதுக்காக கொடுக்குறேன். நீங்களும் கொடுங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்களே எடுத்துக்குறோம்?”

”ஐய்யயோ! மக்கள்கிட்ட இதுக்கு எதிர்ப்பு வருமே? என்ன பண்ணுவீங்க”

”மக்களுக்கு பிடிக்கலைங்கறதால நான் என்ன நடிக்காமலா இருந்தேன்? நடிச்சேன்ல. அது மாதிரிதான்”

“ஆனா, அடுத்த தேர்தல்ல ஓட்டு விழாம போச்சுனா?”

விஜய் வாயை இறுக்க மூடி கொண்டு அப்பாவை பார்க்கிறார். அவர் விஜய் காதில் ஏதோ சொல்கிறார்.

“அதுக்கு நாங்க இன்னொரு வழி வச்சிருக்கோம்.”

“என்ன?”

“மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சி போயி பணம் திரட்டுவோம்.”

“நீங்க நாலு படத்துக்கு மூணு ப்ளாப் கொடுப்பீங்களே? அந்த ப்ளாப் பட தயாரிப்பாளர்களோட கடன்களுக்கு ஏதாவது திட்டம் இருக்கா?” கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலாக வரும் முறைப்பை கண்டு அந்த நிருபரும் எஸ்ஸாகிறார்.

நெக்ஸ்ட்.

“மாநிலத்தொட உள் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு என்ன பண்ண போறீங்க?”

“அதான் ஏற்கனவே, சொல்லி ஆரம்பிச்சிருக்கோமே? மாவட்டம் தோறும் கல்யாண மண்டபம் கட்டுறோம். கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!.”

”வறுமை கோட்டுக்கு கீழே இருக்குற மக்களுக்கு என்ன பண்ண போறீங்க?”

“பிரியாணி பண்ண போறோம்.”

”என்ன?”

“ஆமாம். டெய்லி இலவசமா பிரியாணி போட போறோம்”

எஸ்.ஏ.எஸ். வந்து காதை கடிக்கிறார். “மகனே, பிரியாணி போடுறதுக்கு அவுங்க என்ன நாம நடத்துற உண்ணாவிரதத்துக்கு வந்தவுங்களா?”

“சரி, சட்ட ஒழுங்கு மேம்பட என்ன திட்டங்கள் வச்சிருக்கீங்க?”

“அது எங்க அப்பா செக்‌ஷன். அவர் சொல்லுவார்?”

எஸ்.ஏ.எஸ் - ”சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு இருக்கோம்.”

“ஸ்ஸ்ஸ்... எப்பா! போதும்.”

கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, “முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க”

“என்ன சத்தம்?”

“இல்ல சார், சைலன்ஸ் சைலண்டா தான் இருக்கோம். நீங்க தான் பேசிட்டு இருக்கீங்கல்ல?”

“வெளிநாட்டு முதலீடுகளை நம்ம மாநிலத்துக்கு கொண்டு வர, என்ன பண்ண போறீங்க?”

“அத பத்தி ஏற்கனவே பேசிருக்கோம், ஒரு லண்டன் நிறுவனத்துடன். அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பிச்சுட வேண்டியது தான்.”

“என்ன அக்ரிமெண்ட்?”

“ஒன் இயர் அக்ரிமெண்ட். பிடிச்சிருந்தா வச்சிருப்போம். இல்லாட்டி திருப்பி அனுப்பிடுவோம்.”

“அது சரி. நீங்க ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர். பட பேரு, எம்.ஜி.ஆர். பாட்டு அப்படின்னு இருந்தீங்க. இப்பல்லாம் அப்படி இல்லாம, பெரியார், பெரியார்ன்னு பேசுறீங்களே? ஏன்?”

“பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு.”

“என்னன்ன?”

“பெரியார் அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன் வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு வந்தாரு”

என்று சொல்லிய படி, திரும்பி அப்பாவை பார்க்கிறார். அப்பா பெருமையில் கண்ணீர் விட்டு, அதை துடைத்து விட, இது தான் சாக்கு என்று எஞ்சியிருந்த நிருபர் கூட்டம், சும்மா ’கில்லி’ மாதிரி எஸ்ஸாகிறார்கள்.

.

34 comments:

Subankan said...

சூப்பர். கலக்கிட்டீங்க!

முரளிகண்ணன் said...

கலக்கல்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தைரியசாலி நீங்க..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு.”
//

எதிர்பார்க்கவே இல்லீங்கண்ணா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!.”//

இது திட்டம்

வெட்டிப்பயல் said...

கலக்கல் :)

வெட்டிப்பயல் said...

//எஸ்.ஏ.எஸ் - ”சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு இருக்கோம்.”
//

இது டாப்பு :)

Raju said...

:))

சித்து said...

சூப்பர் தல, கலக்கிட்டீங்க.

வால்பையன் said...

எங்க தான் போய் முடியும் இது!

இதுக்கு வேற வழியே இல்லையா!

Anonymous said...

ramesh from salem

thala theatre screenlaye pakka mudiyadha munchiya sattasabaila parka mudiyuma..........

கார்க்கிபவா said...

கிகிகி.. நல்லா இருக்கு பாஸ்

கிரி said...

:-))))

सुREஷ் कुMAர் said...

இக்கி..இக்கி..
நல்லா இருக்குபா..

Unknown said...

//கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, “முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க”//

கலகிட்டீங்க பாஸ்

Bleachingpowder said...

சூடான இடுகையை தூக்கீட்டாங்க, இருந்திருந்தா நிச்சயமா இது தான் நம்பர் ஒன்.

சீக்கிரமா பார்ட் 2 போடுங்க, ஆவலா இருக்கோம்

நரேஷ் said...

நகைச்சுவை ஒன்றே தன் வாழ்வின் பிரதான லட்சியமாக கொண்டுள்ள என் தலைவனைப் பற்றி பேசுவோர் தாராளமாக பேசலாம்...

என் தலைவர் சீரியசாகப் பேசுவதாலோ, பஞ்ச் டயலாக் பேசுவதாலோ அதிலுள்ள நகைச்சுவை உங்களுக்கு புரியவில்லை என்றால் உங்களது நகைச்சுவை உணர்வில்தான் குறைவே தவிர தலைவரிடம் இல்லை

பதி said...

:)))))))

சரவணகுமரன் said...

நன்றி Subankan

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

//தைரியசாலி நீங்க..,//

எல்லாம் நீங்க இருக்குறீங்கன்னு ஒரு தைரியம் தான் :-)

சரவணகுமரன் said...

நன்றி வெட்டிப்பயல்

சரவணகுமரன் said...

நன்றி டக்ளஸ்

சரவணகுமரன் said...

நன்றி சித்து

சரவணகுமரன் said...

வாங்க வால்பையன்

சரவணகுமரன் said...

ரமேஷ்,

இப்படித்தான் அவரு நடிக்க வந்தபோதும் சொன்னாங்க... ஆனா, இன்னைக்கு?

சரவணகுமரன் said...

நன்றி கார்க்கி

சரவணகுமரன் said...

நன்றி கிரி

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ் குமார்

சரவணகுமரன் said...

நன்றி ’என் பக்கம்’ ராஜேந்திரன்

சரவணகுமரன் said...

ரொம்ப நன்றி ப்ளிச்சிங் பவுடர்

சரவணகுமரன் said...

//நகைச்சுவை ஒன்றே தன் வாழ்வின் பிரதான லட்சியமாக கொண்டுள்ள என் தலைவனைப் பற்றி பேசுவோர் தாராளமாக பேசலாம்...

என் தலைவர் சீரியசாகப் பேசுவதாலோ, பஞ்ச் டயலாக் பேசுவதாலோ அதிலுள்ள நகைச்சுவை உங்களுக்கு புரியவில்லை என்றால் உங்களது நகைச்சுவை உணர்வில்தான் குறைவே தவிர தலைவரிடம் இல்லை//

இப்படியெல்லாம் பேசி கட்சியில சேர்ந்துரலாம்ன்னு பார்க்குறீங்களா?

சரவணகுமரன் said...

நன்றி பதி

jagadeeswaran said...

ஏங்க கொஞ்சம் சிரிங்க,

சிரிக்க மாட்டிங்களா...

சிரிக்க வைச்சுடுவேன்...

அப்புறம் கோவிச்சுக்க கூடாது

சிரிச்சிடுங்க

அட விஜய் அடுத்த படத்துல சிக்ஸ் பேக் வைக்கப் போராராம்.
பாத்திங்களா சிரிச்சிட்டிங்களே...இதுக்கு தான் முன்னையே சொன்னேன்.