Monday, June 22, 2009

பசங்க - எப்பூடீ...

குழந்தைகள் கதையை வைத்து பெரியவர்களுக்கு படம் காட்டியுள்ளார் இயக்குனர். கமர்ஷியல் படங்களில் வரும் கேரக்டர்கள் செய்யும் வேலையை, சிறுவர்களை செய்ய வைத்து, ஜாலியாக சோர்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். பள்ளிக்கூட காட்சிகள், கடந்து வந்த காலத்தை நினைவுப்படுத்தும். இதற்காக இயக்குனரும், டைட்டிலில் ஏகப்பட்ட அறிமுகங்களை கண்டதால் தயாரிப்பாளர் சசிக்குமாரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஏனோ தெரியவில்லை. எனக்கு ஆரம்பத்தில் கதையின் நாயகர்களான அன்பு-ஜீவா கதாபாத்திரங்கள் சண்டை போடும் காட்சிகளை விட, அந்த லவ் சீன்கள் பிடித்திருந்தன. இளையராஜா இசையை இப்போது பிண்ணனி இசையாக, டிடிஎஸில் கேட்பது நன்றாக இருந்தாலும், நிறைய படங்களில் பயன்படுத்துவதால், வர வர ஓவர் டோஸாக மாறுகிறது. படத்தில் தொடர்ச்சியாக வரும் வெவ்வேறு செல்போன் காட்சிகள், ரிங்டோன்கள், தமிழ்நாட்டு செல்போன் நிலவரத்தை எதார்த்தமாக பதிவு செய்துள்ளது.

ஜீவாவின் அப்பாவாக வரும் வாத்தியார் நடிகர் அருமையாக நடித்துள்ளார். யார் அவர்? பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால், பார்த்தது போலவும் உள்ளது. அன்பின் அப்பாவாக வருவது, கல்லூரி படத்தில் நடித்தவர்தானே? அவர் பாலாஜி சக்திவேலின் உதவியாளர் என்று ஞாபகம். புதுசாக இருந்தாலும் பட்டாசாக நடித்திருக்கிறார்கள் அனைவரும். பக்கடா டிரிபில்ஸ் ஏற்றியவாறு, சைக்கிளை பேசி கொண்டு அழுத்தும் அந்த நீண்ட சிங்கிள் ஷாட் காட்சி சூப்பர்.

படமெங்கும் மற்ற தமிழ் படங்களை சிறுவர்கள் மூலம் கிண்டல் அடித்துள்ளார்கள். அதற்காக இது ஒன்றும் வேறு டைப் படம் கிடையாது. இதுவும் சினிமாத்தனங்கள் நிறைந்த பீல் குட் படம் தான். ஆரம்பத்தில் ஜீவா கேங்கிற்கு கொடுக்கும் பில்ட்-அப், கமர்ஷியல் பட ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்ட் அப்புக்கு குறைந்ததில்லை. எரிச்சலை வரவழைத்தது. பள்ளியில் தேசிய கீதத்திற்கு அனைவரும் வேலை விட்டுவிட்டு அப்படியே நிற்கிறார்கள். தேசிய கீதம் பாதி ஓடிய பிறகு தான், எனக்கு உறைத்தது. நாம் ஏன் எழுந்து நிற்கவில்லை? ஸோ, எதார்த்ததில, யாரும் இப்படி நிற்க மாட்டாங்க.

எனக்கு படத்தில் ரொம்ப பிடித்தது புஜ்ஜிமா தான். அவன் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாலும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். இடைவேளையின் போது வரும் குடும்ப சண்டையின் குறுக்கே புகுந்து, வாத்தியாரைக் குத்துவிட்டு விட்டு போவது கலக்கல்.

வெளி மாநில நண்பர்களுடன் சினிமா பற்றிய உரையாடல்களின் போது, தமிழ் சினிமாவை பற்றி உயர்வாக பேச நிறைய விஷயங்கள் இருக்கும். ’தாரே ஜமீன் பார்’ படம் வந்த சமயம், குழந்தைகள் உலகம் பற்றிய பேச்சு வந்த போது, அதற்கு இணையாக சொல்ல ஏதும் இல்லாத ஏக்கம் இருந்தது. இனி இருக்காது. நன்றி, பாண்டிராஜ் - சசிக்குமார்.

13 comments:

கிரி said...

நானும் இந்த ஞாயிறு தான் பார்த்தேன் ..படம் சூப்பர்

மாதேவி said...

ஜீவா கேங்கிற்கு கொடுக்கும் பில்ட்-அப், ....... எரிச்சலை வரவழைத்தது.எனக்கும்தான்.

நேற்றுத்தான் பார்க்க தொடங்கினேன்...முடியவில்லை

நீங்கள் எழுதியதைப்பார்த்ததும் ஆவல் மேலிடுகிறது இன்று பார்த்து முடித்துவிடுவேன்.நன்றி.

DHANS said...

’தாரே ஜமீன் பார்’ படம் வந்த சமயம், குழந்தைகள் உலகம் பற்றிய பேச்சு வந்த போது, அதற்கு இணையாக சொல்ல ஏதும் இல்லாத ஏக்கம் இருந்தது. இனி இருக்காது. நன்றி, பாண்டிராஜ் - சசிக்குமார்

me too thanks guys

mugil said...

எங்க மினி சார்லஸ்ல பாத்தீகளா?

ராஜன் said...

//நானும் இந்த ஞாயிறு தான் பார்த்தேன் ..படம் சூப்பர் //

நான் இன்னும் பார்க்கவில்லை.... ஏதாவது பரிகாரம் இருக்குதுங்களா ?

நரேஷ் said...

//ஏனோ தெரியவில்லை. எனக்கு ஆரம்பத்தில் கதையின் நாயகர்களான அன்பு-ஜீவா கதாபாத்திரங்கள் சண்டை போடும் காட்சிகளை விட, அந்த லவ் சீன்கள் பிடித்திருந்தன//

வயசுக் கோளாறா இருக்கும் :))))

எனக்கும் பசங்க படம் ரொம்ப புடிச்சிருந்தது..விமர்சனம்லாம் கூட போட்டிருந்தேன்...

ஒருவழியா பாத்துட்டீங்க போல???

சில பல குறைகள் இருந்தாலும், மத்த கொடுமைகளுக்கு இந்தப் படம் ஆறுதல் அளிக்கிறது...

நீங்க சொன்ன புஜ்ஜிகுட்டி, அழிச்சாட்டியம்...

சரவணகுமரன் said...

நானும் தான் கிரி... ரெண்டு பேரும் லேட்டு...

சரவணகுமரன் said...

பாருங்க மாதேவி

சரவணகுமரன் said...

வாங்க DHANS

சரவணகுமரன் said...

முகில்,

இல்லீங்க... ஊருக்கு போயி நாளாச்சு...

பார்த்தது இங்கே,
http://www.saravanakumaran.com/2009/06/blog-post_18.html

சரவணகுமரன் said...

வாங்க நரேஷ்...

//வயசுக் கோளாறா இருக்கும் :))))//

ஓ! :-)

அந்த காட்சிகள் நல்லா காமெடியா இருந்துச்சு...

//ஒருவழியா பாத்துட்டீங்க போல???//

ஆமாங்க... நீண்ட காத்திருப்புக்கு பிறகு...

//சில பல குறைகள் இருந்தாலும், மத்த கொடுமைகளுக்கு இந்தப் படம் ஆறுதல் அளிக்கிறது... //

அதென்னமோ, சரிதான்

நாமக்கல் சிபி said...

குட் ரிவியூ!

நானும் பார்த்துட்டேன்!

சரவணகுமரன் said...

நன்றி நாமக்கல் சிபி