Friday, July 10, 2009

நாட்டு சரக்கு - நயன்தாரா டாட்டூ

ஆடி பிறப்பதற்கு பத்து நாட்கள் முன்பே டிவி சானல்களில் ஆடி தள்ளுபடி ஜவுளி விளம்பரங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. சரவணாவில் சினேகா காண்ட்ராக்ட் முடிந்துவிட்டது போலும். இப்போது ஸ்ரீதேவிக்காக ஆடி விளம்பரத்தில் ஆடி கொண்டு இருக்கிறார் (எத்தனை ஆடி?). ராதிகா மேடம் சென்னை சில்க்ஸில் துணி வாங்க சொல்றாங்க. நல்லவேளை, இவுங்க ஆடவில்லை. ஜெயசந்திரனுக்கு லேகா வாஷிங்க்டனும், பூர்ணாவும். போத்தீஸ்க்காக சத்யராஜ் என்ன செய்ய போகிறாரோ? ஒரு வருட காண்ராக்டுக்காக ஒரு கோடி வாங்கியிருப்பதாக சொல்வதால், சும்மா விட மாட்டார்கள். பிரபு சினிமாவில் போடாத வேஷங்களை கூட கல்யாணுக்காக போடுகிறார். “சரவணா... பிரமாண்டமா...” என்று உலக அதிசய பின்னணியில் தமன்னாவும், லட்சுமிராயும் இன்னபிற அழகிகளுடன் ஆடி கழிவு துணியை பிரமாண்டமாக வாங்க சொல்கிறார்கள். ஆடி தள்ளுபடிக்கும், பிரமாண்டத்துக்கும் என்னப்பா சம்பந்தம்?

----

இன்பமோ, துன்பமோ... சந்தோஷமோ, கஷ்டமோ...
ஒரு நிமிஷம் எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கிட்டு
மனசை அமைதியாக்கிட்டு யோசிச்சு
ஒரு முடிவு எடுத்தா, அது சரியா வரும்

அப்படிங்கற மாதிரி பிரபுதேவா நடிச்ச காதலன் படத்துல பாலகுமாரன் எழுதிய வசனம் ஒண்ணு வரும். எல்லோரும் அப்படி யோசிச்சா சரி. யோசிச்சிருந்தாலும் சரி.

----

நான் வேலைக்கு சேரும் முன்பு, ஒருமுறை என் நண்பனுக்காக பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் காத்து நின்று கொண்டிருந்தேன். தாமதமாக வந்த அவன், தனக்கு எம்.ஜி. ரோடுக்கும் ப்ரிகேட் ரோடுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றான். இரண்டு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு அவனிடம்,

“இது எம்.ஜி. ரோடு. இந்த பக்கம் ப்ரிகேட் ரோடு. அந்த பக்கம் இருக்குறது காமராஜர் ரோடு.” என்றேன்.

அவன் ஆச்சரியத்துடன், “காமராஜர் ரோடா? இங்கேயா? எப்படி?” என்று கூறியவன், பின்பு அவனாக,

“காமராஜர் படிச்சிட்டு வேலை இல்லாம இங்க வந்திருப்பாரு. அப்ப இந்த பக்கம் தான் தங்கியிருப்பாரு!” என்று காரணம் சொல்லிக்கொண்டான்.

-----

முன்னணி ஹீரோவென்றால் ஒரு படத்திலாவது போலீஸ் வேஷம் போட்டு விடுவார்கள். முன்னணி காமெடி நடிகரென்றால் ஒரு படத்திலாவது ரவுடி வேஷம் போட்டு விடுவார்கள். முன்னணி இசையமைப்பாளர்கள் ஒரு படத்திலாவது அம்மா சென்டிமெண்ட் பாட்டுக்கு மெட்டு போட்டு இருப்பார்கள்.

இளையராஜா பல படங்களில் அம்மா பாட்டுக்கு இசையமைத்து இருக்கிறார். ஜேசுதாஸ், ரஜினி என்ற சூப்பர் காம்பினேஷனில் வந்த “அம்மா என்றழைக்காத உயிரில்லையே”, அம்மா பாடல்களுக்கு பெஞ்ச்மார்க்காக இருக்கிறது. இதில் வீணை, தபலா, வயலின் என்று ரொம்ப சாத்வீகமா, டிபிக்கல் இளையராஜாத்தனமாக இருக்கும். ரஹ்மானுக்கு நியூ படத்தில் வரும் “காலையில் தினமும்” பாடல். இதில் அவருக்கே உரிய கீ-போர்டு, டிரம்ஸுடன் இருந்தாலும் ரொம்ப அடிதடியாக பீட்டுடன் இல்லாமல் அழகா இருக்கும். இது ரஹ்மான் டைப் பாட்டு. அப்புறம் நம்ம தேனிசை தென்றல். அவரு வியாபாரி படத்துக்காக ஒரு அம்மா பாட்டு போட்டு இருப்பாரு. பாடலில் உபயோகித்த இசை கருவிகள் ஆகட்டும், பாடலின் மெட்டு ஆகட்டும் - அக்மார்க் தேவா பாடல். இப்படி இந்த இசையமைப்பாளர்களின் இசை ஸ்டைலை தெரிந்து கொள்ள, ‘அம்மா’ பாடல் என்கிற இந்த சாம்பிள் போதும்.

----

பெஞ்ச்மார்க்ன்னு சொல்லும்போது இன்னொண்ணு நினைவுக்கு வருகிறது. சன் டிவி தமிழர்களின் வாழ்வோடு எந்தளவுக்கு கலந்திருக்கிறது என்றும் தெரிகிறது.

இரண்டு தாய்மார்கள் பேசி கொண்டார்கள்.

“எத்தனை மாசம்?”

“நாலு மாசம்”

“புரண்டு படுக்கிறானா?”

“படுக்குறான்.”

“சன் டிவில தமிழ் மாலைன்னு போடும்போது திரும்பி பார்க்கிறானா?”

“ம்ம்ம்... பார்க்குறான்.”

பார்க்காத குழந்தை விசேஷ குழந்தையாகிவிட்டது. புரண்டு படுப்பது, உட்கார்வது, தவழ்வது, நடப்பது என்பது போல் சன் டிவி தமிழ் மாலையும் குழந்தையின் வாழ்வில் ஒரு மைல் கல்லாகிவிட்டது.

----

கூகிள் அடுத்ததாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிட போகிறார்கள். அங்கே இங்கே என்று கடைசியில் மைக்ரோசாப்டின் அடி வயித்துலேயே கை வைக்க போகிறார்கள். இணைய வசதியுடன் ஒரு சிம்பிள் மெஷினும் கூகிள் கிரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இருந்தால் போதும். ஆன்-லைனிலேயே எல்லாவற்றையும் செய்துவிடும் வசதி வந்துவிடும். நமக்கு விண்டோஸுக்கு கொடுக்குற நாலாயிரம் மிச்சமாகும். ஆனா, அத இன்டர்நெட்டுக்கு கொடுக்க வேண்டிவரும். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த ஜிமெயில்ல, பீட்டா என்ற சோதனை பெயரை இந்த வாரம் தான் தூக்கியிருக்கிறார்கள். இத்தனை வருஷம் ஆனாலும் விண்டோஸில் இருக்குற ஓட்டையை இன்னமும் முழுசா அடைக்குற வழியை காணும். இந்நிலையில் கூகிளின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படியிருக்குமோ?

----

பச்சை குத்திக்கறத முன்னாடி பட்டிக்காட்டான், படிக்காதவன் பண்ற வேலையா சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப, நாகரிகமாக அன்பின் வெளிப்பாடாக மாறிவிட்டது. டாட்டூ. கமிட்மெண்ட் இருக்குறவுங்களும், கமிட்மெண்ட் வேணுங்கறவுங்களும் பண்ணிக்கிறாங்க. நயன்தாரா பிரபுதேவாவுக்காக குத்திக்கிட்ட டாட்டூவை பாத்தீங்களா? எது எப்படியோ, அந்த டிசைன் நல்லாயிருக்குது. பி ஆங்கிலத்திலயும்... rabhu தமிழிலும்...

அந்த பி கூட எனக்கு தமிழ் போலத்தான் தெரிகிறது.பிரபுதேவாவுக்கு தெலுங்காம்... நயன்தாராவுக்கு மலையாளமாம்... டாட்டூ தமிழில்...

வாழ்க தமிழ்!

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நான் கூட என் பேர இப்படித்தான் தமிழ் ஆங்கில கலவையாய் வைத்திருக்கிறேன்

துர்க்கா-தீபன் said...

"பிரபுதேவாவுக்கு தெலுங்காம்... நயன்தாராவுக்கு மலையாளமாம்... டாட்டூ தமிழில்"

சூப்பர் ஹைக்கூ அண்ணே இது. நான் ரசிச்சேன்.

Anonymous said...

அம்மா பாடல் -இசையமைப்பாளர்களின் வழிமுறை- அருமை...

கிரி said...

//அங்கே இங்கே என்று கடைசியில் மைக்ரோசாப்டின் அடி வயித்துலேயே கை வைக்க போகிறார்கள்//

:-))

நாமக்கல் சிபி said...

/டாட்டூ தமிழில்../

குட்!

சரவணகுமரன் said...

சுரேஷ், நீங்களும் இப்படிதானா? :-)

சரவணகுமரன் said...

துர்க்கா-தீபன்,

ஓ! இது தான் ஹைக்கூவா? :-)

சரவணகுமரன் said...

நன்றி இங்கிலீஷ்காரன்

சரவணகுமரன் said...

வாங்க கிரி

சரவணகுமரன் said...

சிபி,

குட்ன்னு நீங்க சொன்னாலும் அதுக்கு பின்னாடி இருக்குற சோகம் எனக்கு தெரியுது! :-)

Prapa said...

நம்ம பக்கமெல்லாம் உங்க பார்விகள் படுறதே இல்ல...

Prapa said...

உங்க கட்சி தானையா நானும் நல்ல தூங்கனுமில்லா.....

Prapa said...

உங்க கட்சி தானையா நானும் நல்ல தூங்கனுமில்லா.....