Monday, July 20, 2009

மெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவில் நான்

மணிரத்னம் இப்ப ராவணன் படம் எடுத்துட்டு இருக்காரு. இதுக்கு அப்புறம் அவரு எடுக்கப்போற படத்தோட கதை இந்த பதிவுல.

ராஜஸ்தான் மாநிலத்தில் சூட்டோடு புழுதி கிளப்பும் ஒரு பாலைவன கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவுங்க சீமா பிஸ்வாஸ். இவுங்களுக்கு ஒரு வயசான கேரக்டர் கொடுக்குறோம். தலை பூரா வெள்ளை முடி வைச்சு மேக்கப். இவுங்க பொண்ணு ஹேமாமாலினி. முதல்ல வருற ரெண்டு ரீல, ப்ளாக்-அண்ட்-வொயிட்ல ஓட்டுறோம். அப்ப சீமா-ஹேமாமாலினி பேமிலி, கிராமத்துக்கு குறுக்க போன நேஷனல் ஹைவேயில ஓட்டல் வச்சு வியாபாரம் பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு சமயம் பஞ்சாப் போற ஒரு லாரில வந்த சிங், அதான் நம்ம தர்மேந்திரா அந்த ஓட்டலுக்கு சாப்பிட வாராரு. வந்தவரு ஹேமாமாலினியோட லவ்ஸ் ஆகி, அவர கூட்டிட்டு பஞ்சாப் போயிடுறாரு.

பஞ்சாப்ல குடும்பம், குட்டின்னு வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்திச்சு. ஆனா, விதி போட்ட குத்தாட்டத்துல அந்த குடும்பமே ஒரு மத கலவரத்துல இறந்துருறாங்க. அவுங்க குட்டி பொண்ணு மட்டும் பிழைக்குறாங்க. பிறகு, தர்மேந்திரா உறவினர்கள், அந்த பொண்ண சீமா பிஸ்வாஸ்க்கிட்டயே விட்டுடுறாங்க. சீமா, பேத்தியை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிறாங்க. தன்னந்தனியா கடையையும் பார்த்துக்கிறாங்க.

பொண்ணு வளர்ந்து ஐஸ்வர்யா ராயா மாறுது. ஹம்பில ஒரு டான்ஸ் போடுது. பாட்டிக்கு ஒத்தாசையா ஒட்டல பாத்துக்குது. ஆனா, பாட்டிக்கு அதுல இஷ்டம் இல்ல. கடையில யாருகூடயும் பேச விடுறதும் இல்ல. ஏன்னா, பொண்ண இழந்தது மாதிரி பேத்தியையும் இழந்துற கூடாதே?

இங்க தான் கதைய ஆரம்பிக்குறோம். அந்த கிராமத்துக்கு மாதவன் வாராரு. அவரு ஒரு தொல்துறை ஆராய்ச்சியாளர். கதைப்படி இவரு தமிழ்நாட்டை சேர்ந்தவரு. இவர ராஜஸ்தான் பாலைவனத்துல நிக்க வச்சி கருப்பாக்குறோம். கதையில இவரு டெய்லி ஐஸ்வர்யா ராய் ஓட்டல்ல தான் சாப்பிடுறாரு. ஒரு சமயம் ’எப்பப் பார்த்தாலும், இந்த சப்பாத்தி தானா?’ன்னு மாதவன் சலிச்சுக்கும் போது, ஐஸ்வர்யா ’வேணும்ன்னா கிச்சன் போயி நீங்களே சமைச்சுக்கோங்க’ என்கிறார். ரோஷத்தில் மாதவனும் தமிழ்நாட்டு ஸ்பெஷல் வடை செய்து காட்டுகிறார். எப்படி செய்வதுன்னும் சொல்லி காட்டுறாரு.

சீமாக்கு வடையும் பிடிச்சு போச்சு. மாதவனும் பிடிச்சு போச்சு. மூணு பேரும் நெருக்கமாயிடுறாங்க. மாதவன் அடிக்கடி போறாரு. சாப்பிடுறாரு. பேசுறாரு. சீமாவுக்கு தெரியாம, ஐஸ்வர்யா ராயை மயக்கி, தன்னோடு மும்பைக்கு கூட்டிட்டு போயிடுறாரு. ஆப்பம் சுட்ட சீமா பிஸ்வாஸுக்கு ஆப்பு.

இனி மும்பைய காட்டுறோம். இங்க மாதவனோட பக்கத்து வீட்டுல தங்கியிருக்காரு, அபிஷேக் பச்சன். என்னது, மாதவன் ஹீரோ இல்லையா?ன்னு ஷாக் ஆகிறீங்களா? அப்படித்தான். ஏன்னா, இங்க ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். டைரக்டரு மணிரத்னம்.

மும்பை வந்ததுக்கப்புறம் ஐஸ்வர்யாவுக்கு மாதவன பிடிக்கலை. தன்னை பாட்டிக்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரேன்னு வருத்தம், கோபம். இந்த சமயத்துல அபிஷேக், மாதவனுக்கு வேலை விஷயமா ப்ரெண்ட் ஆகுறாரு. நிறைய பேசுறாங்க. வெளியே சுத்துறாங்க. ஒருநாள், ஓட்டல்ல ரெண்டு பேரும் சேர்ந்து தண்ணி அடிக்குறாங்க. மாதவன் தண்ணி அடிச்சிட்டு உளறும் போது, அபிஷேக் நீங்க உளறுறது கூட கவிதை என்கிறார். போதையில், மகிழ்ச்சியில் மாதவன் பாட ஆரம்பிக்கிறார். இதுக்கு, ரஹ்மான்கிட்ட இருந்து சுபி, அரபி, வெஸ்டர்ன் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு காக்டெயில் ட்யூன் வாங்குறோம்.

பாட்டுல அப்படியே, தான் ராஜஸ்தான் போனது, சீமா ஓட்டலுக்கு போனது, ஐஸ்வர்யா ராயை சந்திச்சது, ஏமாத்தி கூட்டிட்டு வந்தது, வந்தபிறகு ஐஸ்வர்யா விருப்பமில்லாமல் இருப்பது எல்லாத்தையும் பாடுறாரு. இங்கத்தான் ட்விஸ்ட். ஏற்கனவே, அபிஷேக்குக்கு ஐஸ்வர்யா மேல ஒரு காதல் இருக்குது. ஆனா, மாதவன் மனைவின்னு கட்டுபடுத்திக்கிட்டு இருக்காரு. இப்ப, உண்மை தெரிஞ்சோன்ன, முடிவு பண்ணிருறாரு. கட்டுனா, ஐஸ்வர்யா... அதுவரைக்கும் நோ சாயா...

இனி கிளைமாக்ஸ் தான் பாக்கி. தண்ணி அடிச்சப்ப, மாதவன் கிட்ட இருந்து கறந்த விஷயங்களை, அதாவது மாதவன் பத்தின பலவீனங்களை யூஸ் பண்ணி, ஐஸ்வர்யாவை காப்பாத்தி, கல்யாணம் பண்ணி, ஜோடியா ராஜஸ்தானுக்கு சீமாவை பார்க்க கூட்டி செல்கிறார்.

இது என்ன கதை? இதுல என்ன இருக்குன்னு தலையில அடிச்சிக்கிறீங்களா? கதை சுமாரா இருந்தாலும், இசை, வசனம், ஒளிப்பதிவு, லொக்கேஷன்னு மேக்கிங்ல கலக்குவோம்ல.

சரி, இந்த கதையை ஏன் மணிரத்னம் எடுக்கணும்?

இல்ல, அவர்தான் எடுக்கணும். ஏன்னா, அவரு எடுக்குற மாதிரியான கதை. அவரு எடுக்க வேண்டிய கதை இது.

இதுல என்ன ஸ்பெஷல்?

ஏன்னா,

ஏன்னா,

இது பாட்டி சுட்ட வடையை சுட்ட காக்கா கதை!

----

நீங்க உண்மையிலேயே முற்போக்கு அறிவாளியா இருந்தா, இந்த கதையில வருற குறியீடுகள கண்டுப்பிடிச்சிருக்கணும். For example, இங்க வடைங்கறது ஒரு குறியீடு, மாதவனோட கருப்பு கலர் ஒரு குறியீடு, மாதவன் மப்புல உளறுனத, அபிஷேக் புகழ்ந்தது இன்னொரு குறியீடு.

என்ன, நான் மெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவில் இருக்க வேண்டிய ஆளுதானே? :-)

16 comments:

இராகவன் நைஜிரியா said...

நிச்சயமாக மெட்ராஸ் டாக்கீஸ் கதை இல்லாகாவில் இருக்க வேண்டிய முக்கியமான் நபர் நீங்கத்தான்...

அக்னி பார்வை said...

மணிரத்த்னம் உங்க வீட்ட தான் தேடிக்கிட்டிருக்காரு ஆன எதுக்குன்னு தெரியல

நரேஷ் said...

படத்துல தர்மேந்திரா, ஹேமா மாலினில்லாம் எதுக்கு??? ஸ்டார்
வேல்யூ சேத்தறதுக்கா???

முக்காவாசி இந்தி படத்துல அடுத்தவன் பொண்டாட்டி கூட ஓடிப்போறதுதான் கதைன்னாலும், அதை குறியீடா வெச்சு சொன்னீங்க பாத்தீங்களா அங்கதான் நீங்க நிக்கறீங்க!!!

இதுல எனக்கு என்ன குழப்பம்னா, உண்மையிலியே ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனோட மனைவி, ஆனா படத்துல மாதவனோட மனைவி!!! அப்ப இதுல யாரை அடுத்தவர் மனைவி கூட ஓடுனவங்கன்னு சொல்றது???? யோசிங்க!!!!

நாமக்கல் சிபி said...

மணிரத்னம் ஆட்டோவுல வரதா தகவல்!

சரவணகுமரன் said...

//நிச்சயமாக மெட்ராஸ் டாக்கீஸ் கதை இல்லாகாவில் இருக்க வேண்டிய முக்கியமான் நபர் நீங்கத்தான்...//

ஹி ஹி...

நன்றி இராகவன்

சரவணகுமரன் said...

//மணிரத்த்னம் உங்க வீட்ட தான் தேடிக்கிட்டிருக்காரு ஆன எதுக்குன்னு தெரியல//

அக்னி பார்வை, எதுக்கு தேடுவாரு? என்னை பாராட்டி ஏதாச்சும் பரிசு கொடுக்கத்தான்... :-)

சரவணகுமரன் said...

//படத்துல தர்மேந்திரா, ஹேமா மாலினில்லாம் எதுக்கு??? ஸ்டார்
வேல்யூ சேத்தறதுக்கா???//

ஆமாங்க, நரேஷ்... சின்ன கேரக்டரா இருந்தாலும், பெரிய ஆளுங்க நடிக்கணும்ல?

//அதை குறியீடா வெச்சு சொன்னீங்க பாத்தீங்களா அங்கதான் நீங்க நிக்கறீங்க!!!//

தேங்க்ஸ்’ங்க... நானே யோசிக்காத விஷயங்கள எடுத்து கொடுக்குறீங்களே!

//அப்ப இதுல யாரை அடுத்தவர் மனைவி கூட ஓடுனவங்கன்னு சொல்றது???? யோசிங்க!!!!//

அவ்வ்வ்வ்....

சரவணகுமரன் said...

அவரு நல்லவருங்க...

பிரபல பதிவர் நாமக்கல் சிபி துணை இருக்கும் வரை, ஒன்றும் பிரச்சினையில்லை.

சரவணகுமரன் said...

ஒரு கலைஞனுக்கு செய்யும் மரியாதை, அவரை கிண்டல் செய்வது.

- ’பத்மஸ்ரீ’ விவேக்

PPattian said...

சூப்பர்.. சுடாத கதையை விட சுட்ட கதையே சுவை..

Unknown said...

kaakkaa vadaya sutta kathaya sudarama koduththa ungala mudiyala

Krubhakaran said...

Excellent Story, Neenga than Best

Anonymous said...

ஆஹா இந்த இருட்டுக்குள்ள படம் எடுக்குராப்ல கிணற்றுக்குள் இருந்து பேசுறாப்ல
எடுக்கணும்,காமரா சுற்றி சுற்றி ஒரு சீனை காட்டி பாக்குற நம்மை தலை சுற்ற வைக்கணும் அதுதான் மணி ரத்னம் ஸ்டைல் .உங்களிடம் இருக்கா??? அப்போ நீங்க அந்த ஆளு கதை இலாகா சேரலாம்

பின்னோக்கி said...

எதுக்கும் கதைய பதிவு பண்ணி (இந்தப் பதிவு இல்லைங்க.. Register) வெச்சுடுங்க. யாராவது திருடிடப்போறாங்க. நம்ம டைரக்டர்களுக்கு இருக்குற கதை பஞ்சத்துல சுட்டாலும் சுட்டுடுவாங்க இந்தக் கதையை :)

Anonymous said...

niraiya eluthunga

Jayadev Das said...

Suparo Supar!